அமலா பாலின் முன்னாள் கணவர் ஏஎல் விஜய் ஆண் குழந்தைக்கு அப்பாவானார்.. வாழ்த்தும் பிரபலங்கள்!

சென்னை: அமலா பாலின் முன்னாள் கணவரான ஏஎல் விஜய் ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏஎல் விஜய். இவர் தான் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தில் நடித்த அமலா பாலை கடந்த 2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார்.

பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.

டாக்டர் ஐஸ்வர்யா

டாக்டர் ஐஸ்வர்யா

இந்நிலையில் இயக்குநர் விஜய் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை ஏஎல் விஜய் திருமணம் செய்தார். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் இரண்டாவது திருமணம் ரொம்பவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இயக்குநர் ஏஎல் விஜயின் முதல் மனைவியான அமலா பால், ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாவ்னீந்தர் சிங் என்ற தனது நீண்ட நாள் காதலரை ரகசிய திருமணம் செய்தார் அமலா பால்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

அந்த திருமணத்திலும் பிரச்சனைகள் இருப்பதாக மறைமுகமாக சமூக வலைதளங்களில் கூறி வரும் அமலா பால் விரக்தியான பதிவுகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆண் குழந்தை பிறந்துள்ளது

ஆண் குழந்தை பிறந்துள்ளது

இந்நிலையில் இயக்குநர் ஏ எல் விஜய் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யாவுக்கு இன்று காலை 11.25 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியப்பா ஆயிட்டேன்

பெரியப்பா ஆயிட்டேன்

இயக்குநர் ஏஎல் விஜயின் அண்ணனான நடிகர் உதயா இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆமாம் நான் பெரியப்பாவாகிவிட்டேன். சகோதரர் ஏஎல் விஜய்க்கும் ஐஸ்வர்யாவுக்கும் இன்று காலை 11.25 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது.. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.. என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Arasan Soap Ayra Recent Projects | Saga, Siren, Pakathe Nerathil Pakkuradho
கயல் தேவராஜ்

கயல் தேவராஜ்

குழந்தை பிறந்த தகவலை அறிந்த பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கயல் தேவராஜ், நடிகர் உதயாவின் டிவிட்டை ஷேர் செய்துள்ளதோடு சூப்பர் பெரியப்பா என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X