அப்பாவானார் இயக்குனர் விஜய்.. அழகான ஆண் குழந்தை பிறந்தது.. குடும்பத்தினர் மகிழ்ச்சி!

சென்னை : இயக்குனர் A .L விஜய்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது
மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் குடும்பத்தினர்.

தலைவா, தெய்வத்திருமகள் படங்களை இயக்கிய A .L விஜய் இவர் தமிழில் முன்னணி கதாநாயகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். பல கமர்ஷியல் வெற்றிகளையும் கொடுத்து உள்ளார். இவரின் முதல் படமே தல அஜித்துடன் தான். பின் விஜய், விக்ரம், ஆர்யா என பலருடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தலைவா படத்தை இயக்கி கொண்டிருந்த போது கதாநாயகி அமலாபாலுடன் காதல் ஏற்பட்டு பின் இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இயக்குனர் கதாநாயகியை திருமணம் செய்வது ஒன்றும் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல

விவாகரத்து

விவாகரத்து

திருமணமாகி சிலகாலம் மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தனர் பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சுமூகமாக பிரிய முடிவெடுத்தனர் . 2019ஆம் ஆண்டு சட்டப்படி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டு இருவரும் பிரிந்து சென்றனர். ஏ .எல் விஜய் பல விளம்பர படங்கள் மற்றும் பல திரைப்படங்கள் இயக்கிய பாப்புலர் இயக்குனர். குறிப்பாக விக்ரம் வைத்து இயக்கிய தெய்வத்திருமகள், விஜய் வைத்து தலைவா , ஆர்யாவுடன் மதராசபட்டினம் என்று பல வெரைட்டியை காமித்தவர். இவருக்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது அனைவருக்கும் தெரியும். இவரது இரண்டாம் திருமணம் டாக்டர் ஐஸ்வர்யாவுடன் நடந்தது .

புது வரவு

புது வரவு

சிலருடைய சொந்த வாழ்க்கையில் முதல் திருமணம் தோற்று இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க வேண்டிய சூழ்நிலை அமைந்து விடும். அதேபோல தனக்கு தகுதியான ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் விஜய் அந்த வாழ்க்கை அவருக்கு சிறப்பாகவே அமைந்தது. அப்படி இயக்குனர் விஜய்க்கு அமைந்தது மட்டும் அல்லாமல் அழகான ஆண் குழந்தை இன்று பிறந்து இருப்பது மேலும் மகிழ்ச்சி.

பிடித்ததை செய்தார் அமலாபால்

பிடித்ததை செய்தார் அமலாபால்

அமலாபாலுக்கும், விஜய்க்கும் விவாகரத்து ஆனபிறகு அமலாபால் அவருக்கு பிடித்த ரூட்டில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரை பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இரண்டாவது திருமண செய்தி போன்ற எதைப்பற்றியும் கவலைப்படாமல். விதவிதமாக புத்தகம் படித்து சர்சையில் விழுவதும், பல்புகளை வைத்து கொண்டு போட்டோஸ் எடுப்பதும், நிலா , நட்சத்திரமெல்லாம் முகத்தில் வைத்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிடுவது என்று ஒரு டைப்பாக்கவே மாறிவிட்டார் அமலாபால்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

ஆனால் விஜயோ தனக்கு ஏற்ற இரண்டாவது நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார். அதிலும் முக்கியமான ஒன்று அவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பார்த்த அவரது சொந்தங்களும். நண்பர்களும்,சினிமா வட்டாரத்தில் தெரிந்த அனைவரும் வாழ்த்து கூறிய வண்ணம் இருக்கின்றனர். அட விடுங்கப்பா திரிஷா இல்லனா நயன்தாரா என்ற பாணியில் அவர் கூலாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

நடிகைகளுக்கு பிரச்சனை

நடிகைகளுக்கு பிரச்சனை

சினிமா நட்சத்திரங்களாக மாறிவிட்டால் பார்ப்பவர்களுக்கு அவர்கள் பெரிய நட்சத்திரமாக தெரியலாம் ஆனால் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும், அதிலும் வெளியில் தனிமையில் செல்வது முதல் அவர்களின் சொந்த வாழ்க்கை வரை பல இன்னல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. நடிகைகளை திருமணம் செய்வதும் பின்பு அவர்கள் வேறு ஒருவருடன் ஜோடி போட்டு நடித்தால் அவரது கணவர்களுக்கு பிடிக்காமல் போவதும் உண்டு. அதனால் அவர்களுக்குள் பல கருத்து வேறுபாடு வருகின்றது. இந்த காரணத்தினால் தான் பல முன்னணி நடிகைகள் தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர். சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்தாலும் எந்த ஒரு பிரச்சனைகள் வராமல் சீராக வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X