விஜய் சேதுபதி - அனுஷ்காவை இயக்கும் ஏஎல் விஜய் -விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை : தலைவி படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார் இயக்குனர் ஏஎல் விஜய்.
நீண்ட நாட்களாக தமிழில் படங்கள் இல்லாமல் இருந்த அனுஷ்கா இந்த படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து விஜய் சேதுபதி ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

இயக்குனர் ஏ எல் விஜய்
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கடைசியாக தலைவி படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு சிறப்பான வகையில் தந்திருந்தார். ஏஎல் விஜய்.

ஏஎல் விஜய்யின் அடுத்த படம்
இதையடுத்து தற்போது தனது புதிய படத்தின் பணிகளை துவக்கி உள்ளார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் அனுஷ்கா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் அனுஷ்கா.
தற்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் தமிழிலும் அவர் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஎல் விஜயுடன் 3வது முறையாக அனுஷ்கா
நடிகை அனுஷ்கா கடந்த 2011 மற்றும் 2012ல் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம் படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக அவர் இணைந்துள்ளார். தலைவி படம் ஏ எல் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அவரது அடுத்தப் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக அனபெல் சேதுபதி என்ற படம் வெளிவந்தது. இந்த படம் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கவில்லை இந்நிலையில் அவர் தற்போது கடைசி விவசாயி, காத்துவாக்குல 2 காதல், விக்ரம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மைக்கேல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்காவுடன் அவர் ஜோடி சேர உள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பு
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளதாக முன்னதாக ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார். விஜய் சேதுபதி மற்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக இருந்ததால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











