பெற்றோர் ஆசியுடன் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய்

By Siva

Recommended Video

AL Vijay Marriage: பெற்றோர் ஆசியுடன் மறுமணம் செய்த இயக்குநர் ஏ.எல்.விஜய்- வீடியோ

சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். ஜூலை மாதம் சென்னையில் திருமணம் நடைபெறும் என்றார் விஜய்.

இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

விஜய்

விஜய்

நடிகை அமலா பாலை பிரிந்த பிறகு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு மறுமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து பெற்றோர் பார்த்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை விஜய் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

திருமணம்

விஜய்யின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது பொண்ணு, கடந்த காலத்தை மறந்துவிட்டு புது வாழ்க்கையை சந்தோஷமாக துவங்குமாறு ரசிகர்கள் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 விவாகரத்து

விவாகரத்து

முன்னதாக விஜய்யும், அமலா பாலும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பிரிய முடிவு செய்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றனர். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 அமலா பால்

அமலா பால்

விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ரத்ன குமார் இயக்கத்தில் அவர் வித்தியாசமாக நடித்துள்ள ஆடை படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ஆடை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அமலா பாலுக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்களாம். ஆனால் அமலா தான் மறுமண பேச்சை எடுத்தாலே கண்டுகொள்வது இல்லை என்று கூறப்படுகிறது. விஜய், அமலா பால் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்தது. இந்நிலையில் விஜய்க்கு மறுமணம் நடந்துள்ளதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X