உசுரோட இருந்தாதான் அதைச் செய்ய முடியும்.. ஓபனாகவே சொன்ன அஜித்.. பக்கத்தில் நின்று பார்த்த பிரபலம்
சென்னை: நடிகர் அஜித் குமார் தற்போது தனது அஜித்குமார் ரேஸிங் அணியுடன் ஆசியா அளவிலான லீ மென்ஸ் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இந்த ரேஸ் தொடங்கியதில் இருந்தே திரைப்பட இயக்குநர்கர்கள் ஏ.ஐல். விஜய் மற்றும் சிறுத்தை சிவா என இருவரும் கேமாராவும் கையுமாகவே அஜித் மற்றும் அவரது ரேஸிங் குழுவினரை சுற்றி சுற்றி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கார் ரேஸ் தொடர்பாக ஆவணமாக்குவதற்கு அவர்கள் இருவரையும் அஜித் வரச்சொல்லி உள்ளார். இப்படி இருக்கும்போது, இயக்குநர் ஏ.எல். விஜய் இந்த அனுபவம் குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, நான் முதலில் இங்கு வந்ததும் அஜித் சார் என்னிடத்தில் சொன்னது, 'வெல் கம் டூ மை வேர்ல்டு' என்பதுதான். உண்மையிலேயே இது வேறு உலகம் தான். நாம் வெளியில் இருந்து பார்க்கும்போது ஏதோ கார் ஓட்டுகிறார்கள் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அது அப்படி மட்டும் கிடையாது.

வாழ்வா? சாவா?: ஒரு டிரைவர் கார் ஓட்டி முடித்து அடுத்த டிரைவரை மாற்றுவதை டிரில் என்று கூறுவார்கள். அதை சுமார் 20 நொடிகளுக்குள் செய்ய வேண்டும். அந்த இருபது நொடிகளுக்குள் உள்ளே இருக்கும் டிரைவர் வெளியே வரவேண்டும், வெளியே இருப்பவர் உள்ளே செல்ல வேண்டும். காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என பல வேலைகள் உள்ளது. இது குறித்து நான் அஜித் சாரிடம் கேட்டபோது, இது ரொம்ப சவலானதுதானே சார் என்று கேள்வி கேட்டேன். அதற்கு உடனே, அஜித் சார், "ஆமாம், ஆனால் அதைச் செய்ய நீங்கள் உயிருடன் வெளியே வரவேண்டும்" என்று பதில் அளித்தார். நிஜமாலுமே அஜித் சார் சொன்னது 100 சதவீதம் உண்மை.
அது மட்டும் வெளியே வந்தா: நாங்கள் டாகுமெண்ட் செய்தவை எல்லாம் வெளியில் வரும்போது அஜித் சார், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கான ஒரு ஐகானா மாறி நிற்பார். இந்த கார் ரேஸ் உலகம் அஜித் சார் சொன்னதைப் போல மொத்தமாக வேறான உலகம் தான். ஒருமுறை அஜித் சார் கார் ஓட்ட தயாராகிவிட்டார். அதன் பின்னர் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்தில் அவரது கையும் காலும், கீர் போடும்போதும், பிரேக் மற்றும் ஆக்சிலேட்டரை மிதிக்கும் போது என்னவெல்லாம் செய்யுமோ, அதே போல் செய்து கொண்டு இருந்தார்" அதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











