வெப் தொடரை இயக்கும் தலைவி இயக்குநர்... சென்னையில் க்ளைமாக்ஸ்!
சென்னை : ஏஎல் விஜய் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக காணப்படுகிறார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான தலைவி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது புதிய வெப் தொடரை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஏஎல் விஜய்.

இயக்குநர் ஏஎல் விஜய்
இயக்குர் ஏஎல் விஜய் சிறப்பான பல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் இவர் இயக்கியிருந்த தலைவா படம் இவருக்கு சிறப்பான படமாக அமைந்தது. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள்.

சிறப்பான தலைவி படம்
தொடர்ந்து ஏஎல் விஜய் சமீபத்தில் இயக்கியிருந்த தலைவி படமும் இவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. கங்கணா ரணாவத் நடிப்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தெய்வமகள் படம்
இவரது தெய்வ மகள், மனநலம் சரியில்லாத தந்தையின் தனது குழந்தைக்கான பரிதவிப்பை வெளிப்படுத்திய படம். தன்னுடைய குழந்தை சட்டப்பூர்வமாக தனக்கு கிடைத்தும் அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படும் கேரக்டரில் விக்ரம் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். இதுவும் விஜய்யின் டைரக்ஷனில் சிறப்பான படமாக அமைந்தது.

வெப் தொடரை இயக்கும் ஏஎல் விஜய்
ஏஎல் விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அவர் வெப் தொடரை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த தொடரை ஜீ5 ஓடிடிக்காக இவர் இயக்கி வருகிறார். நடனத்தை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் க்ளைமாக்ஸ்
தொடரில், பசங்க புகழ் ஸ்ரீராம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திட்யா, கல்கொணா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை சென்னையில் எடுக்க ஏஎல் விஜய் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் ஓடிடியில் ரிலீஸ்
விரைவில் இந்தத் தொடர் ஜீ5 ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தான் இயக்கும் படங்களில் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பாக இயக்கும் ஏஎல் விஜய் இந்த தொடரையும் சிறப்பாக கொடுப்பார் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











