ஏ.எல்.விஜய் மகனின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் … வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !
சென்னை : இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரும் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்
கொரோனா காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

தலைவி
தமிழ் சினிமாவில் வித்தியாசமாக அழகான படங்கள் கொடுத்து மக்களின் மனதில் நின்றவர் இயக்குனர் ஏ.எல். விஜய். இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தலைவி திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.அரவிந்த்சாமி எம்ஜிஆராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர்கள், பாடல்கள் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.

மறுமணம்
இவர் 2014ம் ஆண்டு நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வர 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து ஏ.எல். விஜய் 2019ம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவருடன் மறுமணம் செய்து கொண்டார்.

துருவா விஜய்
இதையடுத்து இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. தனது மகனுக்கு இயக்குனர் துருவா விஜய் என அழகாக பெயர் வைத்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மனைவி மற்றும் மகனின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

நெருங்கி உறவினர்கள் மட்டுமே
இந்நிலையில், இயக்குனரின் மகனின் முதல் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக நெருங்கி உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications