தலைவா.. ஜெயிலர் பார்த்துட்டு விஜய் மகன் போட்ட சவுண்ட்.. வேறலெவல் வெறித்தனம்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய்யின் 3 வயது மகன் துருவ் ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு "தலைவா" என ஆக்ரோஷமாக கத்தும் வீடியோவை இயக்குநர் ஏ.எல். விஜய் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

மற்ற எந்த நடிகருக்கும் அமையாத அளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் ஒன்றாக திரண்டு முதல் நாளே ரசிகர்களுடன் ரசிகர்களாக மாறி ஜெயிலர் படத்தை பார்த்துள்ளனர்.

Director AL Vijay son shouted Thalaiva after watching Jailer movie

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் வரிசையில், இயக்குநர் ஏ.எல். விஜய் தனது மகனுடன் ஜெயிலர் படத்தை பார்த்து இருக்கிறார்.

தலைவா என கத்திய விஜய் மகன்: நடிகர் விஜய்யை வைத்து தலைவா படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய்யின் மகன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு அப்பாவுடன் காரில் வரும் போது அந்த வைப்பில் தலைவா என கத்திய வீடியோவை ஏ.எல். விஜய் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஏ.எல். விஜய் ஹேப்பி: இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பாலுக்கு விவாகரத்து நடைபெற்ற நிலையில், இரண்டாவதாக டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு துருவா எனும் மகன் 2020ல் பிறந்தார். இந்நிலையில், 3 வயதான தனது மகனுடன் ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்த ஏ.எல். விஜய் தனது மகனுக்கு சூப்பர்ஸ்டாரை பிடித்து விட்டது என பயங்கர ஹேப்பியாகி உள்ளார்.

Director AL Vijay son shouted Thalaiva after watching Jailer movie

டிரெண்டாகும் வீடியோ: மதராசப்பட்டினம், தாண்டவம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் அருண் விஜய், எமி ஜாக்சனை வைத்து மிஷன் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அவரது மகன் "தலைவா" என கத்தும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உங்கப்பன் விசில கேட்டவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் என ஹுகும் பாடலில் வரும் வரிகள் எல்லாம் சூப்பர்ஸ்டாருக்கு மட்டுமே செட் ஆகும் என ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X