மதராசப்பட்டினம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானாம்.. மனம் திறந்த இயக்குநர் விஜய்!
சென்னை: மதராசப்பட்டினம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்து இயக்குநர் விஜய் மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் மதராசப்பட்டினம். நடிகர் ஆர்யா, ஏமி ஜாக்ஸன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

பத்தாண்டுகள் நிறைவு..
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். மதராசப்பட்டினம் படத்தில் தமிழ் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி லண்டனை சேர்ந்த நாடகக் கலைஞர்களும் நடித்திருந்தனர். இந்தப் படம் ரிலிஸ் ஆகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஆடிஷன் செய்தேன்
இந்நிலையில் இப்படத்தில் எமி ஜாக்சனுக்கு பதில் யார் நடிக்க இருந்தார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் ஏஎல் விஜய். அவர் பேசியதாவது, எமி நடித்த பாத்திரத்திற்காக நான் பல பெண்களை ஆடிஷன் செய்து கொண்டிருந்தேன்.

எமி எப்படி வந்தார்?
உண்மையில் எமியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, நடிகை வனேசா ஹட்ஜென்ஸின் ஏஜென்டுகளை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். என்றார். மேலும் எமி ஜாக்சனைப் பற்றி இயக்குநர் விஜய் எவ்வாறு அறிந்து கொண்டார் என்பதையும், அவர் எவ்வாறு படத்திற்குள் வந்தார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

ஏஜென் மூலம்..
"மிஸ் டீன் வேர்ல்ட் 2009 அழகிப்பட்டத்தை வென்றதாக இணையத்தில் எமியின் ஒரு படத்தை மட்டுமே நான் பார்த்தேன். இதனை தொடர்ந்து தனது ஏஜென்டின் மூலம் எமியின் ஏஜென்டை தொடர்பு கொண்டு ஆடிஷனுக்கு வரச் சொன்னேன்.

கடைசி நாளில்..
"நான் இந்த பாத்திரத்திற்காக லண்டனில் ஆடிஷன் செய்துகொண்டு இருந்தேன், என் ஏஜென்ட் எமி ஜாக்சனுடன் கடைசி நாள் வரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் வருவார் என்று அவர் என்னிடம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர், எமி ஜாக்ஸன் ஆடிஷனின் கடைசி நாளில் வந்தார்.

பார்த்ததும் செலக்ட்
சிலர் மட்டுமே க்யூவில் நின்றிருந்த நிலையில் எமி ஜாக்ஸன் வரிசையில் நிற்பதை நான் கண்டேன். நான் அவரிடம் நேரடியாக நடந்து சென்று அவரை அழைத்து வந்து என்னுடை டீமிடம் அந்த வேடத்தில் இவர்தான் நடிக்கிறார் என்றேன் " இவ்வாறு இயக்குநர் ஏஎல் விஜய் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











