Alphonse puthren :விரைவில் இணையும் மெகா கூட்டணி.. பிரேமம் இயக்குநர் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

சென்னை : இசைஞானி என்று அனைவராலும் புகழப்படுபவர் இளையராஜா. இவர் 1500க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.

இந்திய அளவில் தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான மொழிப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரது பல பாடல்கள் இவருக்கே போட்டியாக அமைந்துள்ளன.

80, 90 காலகட்டங்களில் எங்கும் இளையராஜா, எதிலும் இளையராஜா என்ற ட்ரெண்ட் காணப்பட்டது. ரசிகர்கள் இளையராஜாவின் பாடல்களை கொண்டாடினர்.

இளையராஜாவுடன் இணையும் பிரேமம் இயக்குநர் : இசைஞானி இளையராஜா தன்னுடைய சிறப்பான படங்களின் இசையமைப்பால் சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆளுமையாக காணப்படுகிறார். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, தொடர்ந்து இந்த வயதிலும் தன்னுடைய இசைப்பணியை விடாமல் தொடர்ந்து வருகிறார். இசை மீது கொண்ட காதல், வெறி இதற்கு காரணமாக இருக்கலாம். இளையராஜாவின் காலகட்டத்திலும் அதற்கு பின்பும் சினிமாவில் சிறப்பாக இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் காணாமலே போயுள்ளனர்.

Director Alphonse Puthren met Music composer Ilayaraja and confirms he joins with him soon

அந்த வகையில், இளம் இசையமைப்பாளர்களுடன் போட்டியிட்டு, தன்னுடைய தனித்தன்மையான பாடல்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் விடுதலை படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் இதுகுறித்தெல்லாம் எதையும் தன்னுடைய மண்டையில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து கருமமே கண்ணாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவை சந்தித்துள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும் ஆனால் இந்த முறை புகைப்படம் எடுக்க மறக்கவில்லை என்றும் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இளையராஜா குறித்து தான் விளக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ரோமியோ பிக்சர்சுடன் தான் இணையும் அடுத்தப் படத்தை தொடர்ந்து இளையராஜாவுடன் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், தொடர்ந்து இயக்கிய பிரேமம், மிகச்சிறந்த வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா கூட்டணியில் கோல்ட் படத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்ததாக ரோமியோ பிக்சர்சுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தில் இளையராஜாவுடன் இணையவுள்ளதாக தற்போது அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலை பெறுவதற்காகவே தற்போது இளையராஜாவை அவர் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமம் இயக்குநருடன் இளையராஜா இணையவுள்ளது ரசிகர்களுக்கு கண்டிப்பாக உற்சாகமூட்டும் செய்தியாகவே அமையும். விரைவில் இந்தக் கூட்டணி இணையட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X