Atlee: வைஃப் லெசன்.. என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க? கீர்த்தி சுரேஷ் ஷாக்.. அட்லீ ரியாக்ஷன்!
துபாய்: இயக்குநர் அட்லீயின் சினிமாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு அவரது பேச்சு, மேடைகளில் அவர் நடந்து கொள்ளும் விதத்திற்கும் தனி ஃபாளோவர்களே உள்ளார்கள். அண்மையில் தான் தயாரித்த பேபி ஜான் படத்தின் புரோமோசனின்போது அவர் சொன்ன கதை பலரது கவனத்தினை ஈர்த்தது.அட்லீ எப்போதுமே தனது சினிமாக்களில் அம்மா, மனைவி கதாபாத்திரங்களை மிகவும் பாசமான கதாபாத்திரங்களாகவே வடிவமைத்துள்ளார்.
அதற்கு காரணம், அவர் தனது மனைவி மற்றும் அம்மாவைக் காரணமாக கூறியுள்ளார். இப்படியான நிலையில், பேபி ஜான் படத்தின் புரோமோசனின்போது அட்லீ நடந்து கொண்டது குறித்து, பேபி ஜான் படத்தின் நடிகர் வருண் தவான், கேள்வி எழுப்பியதற்கு அவர் அளித்துள்ள பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அட்லீ தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற பின்னர், இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார். ஷாரூக் கானை இயக்கிய இவர், அந்த ஜவான் படத்தின் வசூல் ரூபாய் 1,000 கோடிகளைக் கடந்ததால், இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்தார். இதுமட்டும் இல்லாமல், தான் தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் வெளியான தெறி படத்தினை இயக்கினார். இது இவரது இரண்டாவது படம். இந்தப் படத்தினை தற்போது இவர் இந்தி ரீமேக்கில் தயாரித்துள்ளார்.

பேபி ஜான்: இந்தப் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் கிருஸ்மஸ் தினத்தில் வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் மிகவும் விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது. தனது திருமணத்தை கடந்த வாரத்தில் செய்து கொண்ட, கீர்த்தி சுரேஷ் ஹனிமூனுக்கு எல்லாம் போகாமல், படத்தின் புரோமோசனில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். இந்த புரோமோசனில், அட்லீயும் அட்லீயின் மனைவியும் கலந்து கொள்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ்: இப்படியான நிலையில் புரோமோசனின்போது,அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீயும், நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும் தங்களை புகைப்படம் எடுக்கும்படிக் கூறிவிட்டு, போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தனர். இவர்களை புகைப்படம் எடுக்காமல், அட்லீ தவறுதலாக வீடியோ எடுத்துவிட்டார். தான் புகைப்படம் எடுத்துவிட்டதாகக் கூறி, ப்ரியா அட்லீயையும், கீர்த்தி சுரேஷ்ஷையும் அருகில் அழைத்து தான் எடுத்ததைக் காண்பிக்கின்றார். இதனைப் பார்த்த கீர்த்தி சுரேஷ், போட்டோ எடுக்கச் சொன்னா, என்னடா வீடியோ எடுத்து வெச்சு இருக்க? எனக் கேட்கின்றார்.

வீடியோ: நடக்கின்ற நிகழ்வுகளை தனது மொபைலில், வீடியோ எடுத்த நடிகர் வருண் தவான், அட்லீயிடம், அட்லீ சார் நீங்க, பெரிய இயக்குநர். அப்படி இருக்கும்போது நீங்க ஏன் இப்படி போட்டோகிராபர் போல ஏன் போட்டோ எல்லாம் எடுத்துட்டு இருக்கீங்க எனக் கேள்வி கேட்க. அதற்கு உடனே அட்லீ துளியும் யோசிக்காமல், 'லைஃப் சார்.. லைஃப் லெசன்ஸ்.. எனக் கூறினார். உடனே வருண் தவான், லைஃபா? இல்லை வைஃபா? எனக் கேள்வி கேட்க, உடனே அதற்கும், வைஃப் லெசன் சார்' என பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











