Vaadivaasal: இந்த வருஷத்திலேயே வாடிவாசல் சூட்டிங் துவங்கும்.. இயக்குநர் அமீர் உறுதி!
சென்னை: நடிகர் சூர்யா -வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து சூட்டிங் தள்ளிப் போகிறது.
தன்னுடைய விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களில் வெற்றிமாறன் மிகவும் பிசியாக இருந்ததால் இந்தப் படத்தை துவங்க முடியாமல் அவரும் கங்குவா படத்தில் நடித்துவருவதால் வாடிவாசல் படத்தில் இணைய முடியாமல் சூர்யாவும் உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தனது சமீபத்தில் பேட்டியில் உறுதியளித்துள்ளார்.

வாடிசாவல் சூட்டிங் அப்டேட் சொன்ன இயக்குநர் அமீர்: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி வருகின்றன. தன்னுடைய கதைகளை, கேரக்டரை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார் சூர்யா. பல சோதனை முயற்சிகளையும் தன்னுடைய படங்களில் அவர் சேர்த்து வருகிறார். இதற்கான சமீபத்திய உதாரணம் விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர். அவரை அப்படியொரு ஆக்ரோஷமான கேரக்டரில் அவரது ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மிகவும் சர்ப்பிரைசாக இந்தக் கேரக்டரை விக்ரம் படக்குழுவினர் வைத்திருந்த நிலையிலும் எப்படியோ ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் குறித்து தெரியவந்தது. ஆனாலும் சில நிமிடங்களே படத்தில் நடித்திருந்தாலும் சூர்யா மிரட்டியிருந்தார். மேலும் சூரரை போற்று, ஜெய்பீம் என தனது அடுத்தடுத்த படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து அந்தப் படங்களை வெற்றிப் படங்களாக மாற்றினார் சூர்யா. தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை கமர்ஷியல் இயக்குநர் என பெயரெடுத்துள்ள சிவா எப்படி உருவாக்கியுள்ளார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது கொடைக்கானலில் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்குரா இயக்கத்திலும் தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தனது சமீபத்திய பேட்டியொன்றில், விரைவில் வாடிவாசல் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக வெற்றிமாறன் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதனால் அடுத்ததாக சூர்யா வாடிவாசல் சூட்டிங்கில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக இயக்குநர் அமீரும் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீர் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், தற்போது அவரை தொலைபேசியில் அழைத்த வெற்றிமாறன், ஸ்கிரிப்ட் குறித்து பேசியதாக அமீர் கூறியுள்ளார். தன்னுடைய கேரக்டரில் நடிக்க தயாரிப்புத்தரப்பு மற்றும் வெற்றிமாறனின் நண்பர்கள் பல சாய்ஸ்களை கொடுத்த போதிலும் இந்தக் கேரக்டரில் தான்தான் நடிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளதாகவும் அமீர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா இந்தப் படத்திற்காக தன்னுடைய வீட்டிலேயே காளைகளை வளர்த்து வரும் நிலையில் அவர் அவற்றுடன் மிகவும் பழகியுள்ளதாகவும் அதனால் அவர் சூட்டிங்கில் சிரமமில்லாமல் நடிக்க முடியும் என்றும் கூறியுள்ள அமீர், தான் இன்னும் அந்த காளையுடன் பழகவில்லை அதனால் சூட்டிங்கில் எப்படி நடிக்கப் போகிறேன் என்பது குறித்து தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் முன் தயாரிப்பு பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











