தமிழகத்தின் மாண்பையும்..பெருமையையும் காத்திட வாக்களித்தேன்.. இயக்குனர் அமீர் பேச்சு!
சென்னை : இயக்குனர் அமீர், தமிழகத்தின் மாண்பையும், பெருமையையும் காத்திட நான் இன்றைக்கு வாக்களித்து விட்டேன் மறக்காமல் நீங்களும் வாக்களியுங்கள் என்று கூறியுளளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது.
மாலை 6 மணிமுதல் 7 மணிவரையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலப்பரிட்சை
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலை இருபெறும் திராவிட கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் எதிர்கொள்கிறது. இதனால் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.இத்தேர்தல் திமுகவுக்கு பலப்பரிட்சையாக உள்ளது.
Recommended Video

வாக்களித்தனர்
காலை 7 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ரஜினி, கமல், சூர்யா, அஜித், விஜய், அருண்விஜய், விஜயகுமார், விக்ரம், என முக்கிய திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்தினர். விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார் இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமீர் வீடியோ
இந்நிலையில் பிரபல இயக்குநர் அமீர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அன்பார்ந்த தமிழர்களே, மாநில சுயாட்சியை மீட்டெடுக்க, தமிழகத்தின் மாண்பையும், பெருமையையும் காத்திட நான் இன்றைக்கு வாக்களித்து விட்டேன். மறக்காமல் நீங்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











