ஆண்ட்ரியாவை விடுங்கள்.. இமானை ரசிக்கலாம்.. விழா மேடையில் ஓபனாக பேசிய அமீர்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அமீர். தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் எந்தவித சமரசமுமின்றி ரசிகர்களுக்கு கொடுப்பவர். முக்கியமாக அவர் இயக்கிய ராம், பருத்திவீரன் ஆகிய படங்கள் கல்ட் க்ளாசிக்காக இருப்பவை. அதிலும் பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. இயக்குநராக மட்டும் இருந்த அவர் யோகி படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார். கடைசியாக அவர் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க அமீர் ஒரு பட நிகழ்ச்சியில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சேது, நந்தா ஆகிய படங்களில் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யாவை புதுவிதமாக காண்பித்து காதல் ஜானரில் அந்தப் படத்தை இயக்கி வெற்றி பெற்றார் அமீர். அதனையடுத்து அவர் இயக்கிய ராம் படத்தின் மூலம் அவரே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. அதேசமயம் சூர்யாவின் நடிப்புக்கு அந்தப் படம் நல்ல தீனி போடும் விதமாக அமைந்தது. இப்போதுவரை சூர்யாவின் ரசிகர்களுக்கு அந்தக் கேரக்டர் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
பருத்திவீரன்: மூன்றாவது படமாக பருத்திவீரனை இயக்கினார். கார்த்தியின் முதல் படமான அது இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. கார்த்தியுடன் ப்ரியாமணி,சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகி ப்ரியாமணிக்கு தேசிய விருதையும் கார்த்திக்கு சிறந்த அறிமுகத்தையும் பெற்று கொடுத்தது.மேலும் இன்றுவரை பருத்திவீரன் படத்தை பலரும் கொண்டாடிவருகிறார்கள். அடுமட்டுமின்றி கோலிவுட்டில் புதிய ஃபார்முலாவை அந்தப் படம் எழுதியது. அந்தப் படம் கொடுத்த தைரியத்துக்கு பிறகுதான் பலரும் மதுரையை பின்னணியாக கொண்டு படங்கள் இயக்குவதை அதிகரித்தார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் அதுபோல் தமிழ் சினிமாவில் இன்னொரு படம் கண்டிப்பாக வராது என்பதுதான் பெரும்பான்மையோனரின் கருத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஆதி பகவான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
நடிகர்: நிலைமை இப்படி இருக்க திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். முதன்முறையாக யோகி படத்தில்தான் அவர் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடசென்னையில் அவர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரம் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர். மேலும் அவரே தயாரித்து நடித்திருக்கும் மாயவலை படமும் ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே ஆதம் பாவா இயக்கத்தில் உயிர் தமிழுக்கு என்ற படத்திலும் நடித்தார் அவர். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேபோல் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் அவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரின் பேச்சு: இந்நிலையில் லெவன் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது விழாவில் பேசிய அவர், "இமானுக்கும், ஒட்டுமொத்தமாக இந்த விழாவின் நாயகனான அக்பர் ஷாவுக்கும் எனது வழ்த்துகள். உண்மையிலேயே இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் குறித்து அதிக பரிட்சயம் எனக்கு இல்லை. பழக்கமும் இல்லை. அக்பரை மட்டும்தான் எனக்கு தெரியும். அவர்தான் என்னை தொடர்புகொண்டு இந்த விழாவுக்கு கண்டிப்பாக வந்துவிடுங்கள் என்று கூறினார். மொத்த திரையுலகத்தையும் இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார் என்று இங்கே வந்த பிறகுதான் எனக்கு தெரிகிறது.
அந்தப் பாடலின் ரசிகன்: நான் ஊதா கலரு ரிப்பன் பாடலின் ரசிகன். நான் எங்கு சென்றாலும் முணுமுணுக்கும் பாடலில் அதுவும் ஒன்று. உங்களுக்கு மதுரை அழகர் சாமியை பற்றி தெரியாது. ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடமாட்டார். அதேபோல் எளிதில் அந்தப் படத்தை விநியோகம் செய்யவும் ஒத்துக்கொள்ளமாட்டார். அவரே விநியோகம் செய்கிறேன் என்று ஒத்துக்கொண்டார் என்றால் லெவன் படம் நன்றாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். நவீன் சந்திரா நடித்திருக்கும் லெவன் திரைப்படம் குறித்து ஒரு தம்பி சொல்கையில் படம் நன்றாக இருக்கிறது என்று கூறினான். இந்தப் படத்தை அக்பர்தான் தயாரித்திருக்கிறார் என்பதும் எனக்கும் தெரியாது. அவர் அழைத்தார் என்றுதான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
இப்போதுதான் தெரிந்துகொண்டேன்: அதேபோல் இயக்குநர் பிரபு சாலமன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருக்கிறார் என்றும் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். பிரபு சாலமன், அக்பர், இமான் எல்லோரும் ஒரு படத்தில் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்தப் படம் நன்றாக இருக்கும் என்று அர்த்தம். படத்தின் பாடல் காட்சிகளை நான் பார்த்தேன். ரொம்ப பிரமாதமாக இருந்தது. ஆண்ட்ரியாவை ரசிப்பதைவிடவும் இமானை ரசிக்கலாம் என்றே நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு பான் இந்தியா படம் மாதிரி இது இருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது எனக்கு பிடித்திருந்தது. ஒரு ஹாரர் படத்துக்கு உண்டான தகுதியுடன் இந்தப் படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அந்தப் படங்கள் மாதிரி இருக்கும்: போர்த்தொழில், ராட்சசன் எல்லாம் சீட் நுனியில் நம்மை அமர வைத்தது. அதுபோல இந்தப் படமும் இருக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. அந்தப் படங்கள் போல் இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறேன். மற்றபடி படத்தில் அனைவரும் நிறையவே உழைத்திருக்கிறார்கள். அது கண்கூடாக தெரிகிறது. உங்களது உழைப்பு அனைத்தும் உங்களுக்கு வெற்றியாக வந்து சேர வேண்டும். அக்பர் ஷா தொடர்ந்து படம் செய்ய வேண்டும். நவீன் சந்திரான் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். இமானும் இனிமேல் ஆட வேண்டும், பாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இமானுடன் வேலை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. என்னுடைய உதவி இயக்குநர் அவருடன் வேலை செய்திருக்கிறார். அப்போதிருந்து எனக்கும் ஆசை வந்துவிட்டது.

கும்கி படத்துக்கு முன்னர்: கும்பி படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் அதன் இயக்குநர் பிரபு சாலமன் என்னிடம் காண்பித்டஹர். கௌதம் மேனன் என நிறைய இயக்குநர்களோடு அப்போது ஒரு மீட்டிங்கில் இருதேன். அந்தப் பாடல்களை பார்த்ததுமே கண்டிப்பாக இந்த ஐந்து பாடல்களும் ஹிட்டாகும் என்று சொன்னேன். அதேபோல் இந்தப் படத்திலும் அவரது உழைப்பு மக்களிடம் சேரும் என்று பரிபூரணமாக நம்புகிறேன். லெவன் திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துக" என்றார்.


Click it and Unblock the Notifications











