twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொந்தங்களை தவிருங்கள்.. நமது உறவுகளை பாதுகாக்க வேண்டும்.. அமீர் பளீச்!

    |

    சென்னை : இயக்குனர் அமீர் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

    Recommended Video

    Actor & Dr.Sethu Last awarness Video | Zi CLinic | Dermatologist

    இயக்குனர் அமீர் கூறும் போது கொரோனா என்ற நோய் இந்தியாவை மட்டுமல்ல தமிழகத்திலும் எதிர்பாராத அளவில் அதிகபடியாக பரவி வருகிறது. இந்த நிலையில் நாம் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Director ameer interview

    மேலும் கொரோனாவை எதிர்த்து நாம் வீட்டில் இருப்பதற்கு அர்த்தம் நாம் அந்த நோயை கண்டு பயந்து விட்டோம் என்று இல்லை இது நாம் இந்த நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை சம்மந்தபட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

    இந்த 21 நாட்கள் கட்டாயம் நாம் வீட்டில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் அப்படி கொடுத்தால் தான் இந்த நோயை நாம் விரட்ட முடியும் என்று கூறியுள்ளார் அமீர் .

    மேலும் பல இளைஞர்கள் இன்று விழிப்புணர்வு இன்றி பைக்கிலும் காரிலும் ஊர் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. இது மிகவும் தவறான விஷயம் என்று கூறியுள்ளார். இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்க பட முதல் காரணம் இந்த மாதிரியான நபர்கள் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் .

    Director ameer interview

    இந்த நேரத்தில் நாம் கட்டாயம் சொந்த பந்தங்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நேரத்தில் குடும்ப உறவுகளை சந்தித்து கட்டி அனைப்பது,கை பிடிப்பது போன்ற விஷயங்களை முழுவதும் தவிர்த்து வீட்டில் இருக்கும் நமது உறவுகளை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார் .

    கொரோனா தாக்கத்தால் மிக பெரிய வல்லரசு நாடுகளே ஆடிபோயிருக்கும் நிலையில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்று எச்சரித்து தயவு செய்து பொருப்புடன் இருங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் அமீர்.

    English summary
    Ameer has given an interview about Corona
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X