பொட்டு வைத்த போட்டோ.. விஜய்யின் பக்கா அரசியல் பிளான்..அமீர் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்த நிலையில், தற்போது, தமிழக வெற்றி கழகம் என்று பெயரில் புது கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அமீர், விஜய்யின் பொட்டு வைத்த போட்டோவிற்கு பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது என்றார்.

நடிகர் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு முதலே தொடங்கினார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு தனது கையால் பரிசு வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Director Ameer Interview about Thalapathy vijays tamilaga vetri kazhagam

இதையடுத்து, புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக் உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதன்பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் அரசியலில் வருவது உறுதியானது.

தமிழக வெற்றி கழகம்: அதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் கூறியுள்ளதால், உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

பாராட்டுகிறேன்: இந்நிலையில், இதுகுறித்து பேட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் அமீர், நடிகர் விஜய் ஒன்று உச்சபச்ச நடிகராக இருக்கிறார். இன்னும் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேலாக அவரால், சினிமாவில் பிரகாசிக்க முடியும். ஆனால், விஜய் அதைவிட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த நல்லதை செய்ய வேண்டும் என்று விரும்பி அரசியலுக்கு வருதை நான் பாராட்டுகிறேன். ஆனால், எந்த மாதிரியான அரசியல் செய்ய வேண்டும் என்பதை பொருத்துத்தான் அவருக்கு ஆதரவு தருவது என்பது மாறும்.

அதிலும் அரசியல் இருக்கிறது: அதேபோல தனது ஜோசப் விஜய் என்ற பெயரை விஜய் என்று மட்டுமே பதிவிட்டுள்ளதும் அரசியல், பொட்டு வைத்த போட்டோவிற்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது. நான் எல்லாருக்குமானவன், என்னை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவனாக என்னை பார்க்காதீர்கள் என்று சொல்ல விரும்புகிறார். தன்னை அவர் ஓர் ஆன்மீக வாதியாக காட்டிக்கொண்டார் இதில் ஒன்றும் தவறு இல்லை என்று அமீர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X