Ajith: பாலாவுக்கும் அஜித்துக்கும் ஏழாம் பொருத்தம் போலயே.. அமீர் சொன்ன அந்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து அடுத்து வெளியாகவுள்ள படம் வணங்கான். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்தில் முதலில் சூர்யா நடிக்க கமிட் ஆகி, அதன் பின்னர், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதைத் கொண்டாடும் விதமாக பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படியான நிலையில், இயக்குந அமீர் சொல்லியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இயக்குநர் பாலா இயக்கத்தில் முதன் முதலில் வெளியான படம் சேது. இந்தப் படத்தில் நடித்த விக்ரமிற்கு இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம். காரணம் அதற்கு முன்னர் விக்ரம் நடித்த படங்கள் எதுவுமே சிறப்பாக ஓடவில்லை. இப்படியான நிலையில் விக்ரமிற்கு கை கொடுத்த படம் சேது.

ameer ajithkumar sethu bala

இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்படியான நிலையில் அமீர் இந்தப் படம் குறித்து தெரிவித்துள்ள விஷயம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, "சேது படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது அஜித்குமார்தான். முதலில் இந்தப் படத்திற்கு அகிலன் என பெயர் சூட்டப்பட்டு, படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டது. ஆனால், அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பின்னர்தான், சேது படம் உருவானது. அகிலன் சேதுவாக மாறும்போது, அந்தப் படத்தில் அஜித் நடிக்க முடியாத சூழல் ஏற்ப்பட்டது" எனக் கூறியுள்ளார்.

ameer ajithkumar sethu bala

ஏழாம் பொருத்தம்: இப்படியான நிலையில் இணையவாசிகள், அஜித்துக்கும் பாலாவுக்கும் ஏதோ ஏழாம் பொருத்தம் போல. அதனால்தான் இருவரும் கமிட்டான படங்கள் நடைபெறாமலே போயுள்ளது என கமெண்ட் அடித்து வருகின்றார்கள். அதாவது, அஜித்தும் பாலாவும் இணைந்த முதல் படமான அகிலன் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படவில்லை. சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. அதேபோல் பல ஆண்டுகளுக்குப் பின்னர், இருவரும், நான் கடவுள் படத்தில் கமிட் ஆனார்கள்.

ameer ajithkumar sethu bala

கை கலப்பு: இந்தப் படத்தில் நடிப்பதற்காக, அஜித் நீளமான முடிகள் எல்லாம் வளர்த்தார். ஆனால் அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்தப் படத்தில் இருந்து அஜித் விலகியதாக தகவல்கள் வெளியானது. மேலும் சிலர் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஆனதாகவே தெரிவித்தார்கள்.

ameer ajithkumar sethu bala

ஹிட்: அஜித் வெளியேறிய பின்னர், நான் கடவுள் படத்தில், ஆர்யா நடிக்க கமிட் ஆனார். சேது படமும், நான் கடவுள் படமும் வேற லெவலில் ஹிட் அடித்தது. மேலும் அந்தப் படங்களில் நடித்த நடிகர்களின் திரை வாழ்க்கையிலும் இந்தப் படங்கள் மைல்கற்களாக அமைந்தது. ஆனால் அஜித்துக்கும் பாலாவுக்கும் ஏழாம் பொருத்தம் போலத் தெரிகின்றது. அதனால்தான், இருவரும் இணைந்து படம் பண்ணமுடியாமலே போய்விட்டது எனவும் கூறி வருகின்றனர்.

ameer ajithkumar sethu bala

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X