Ameer - எனக்கும் சூர்யாவுக்கும் பிரச்னையின் ஆரம்பம் இதுதான்.. மௌனம் கலைத்த அமீர்

சென்னை: Ameer (அமீர்) தனக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்னையின் தொடக்க புள்ளி குறித்து இயக்குநர் அமீர் தெரிவித்திருக்கிறார்.

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக ஹிட்டானது. அதனையடுத்து அவர் ராம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படமும் சரியாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இயக்குநர் அமீர் நஷ்டமடைந்து கடனில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

Director Ameer Opens up about the starting point of the problem between him and Suriya

அந்தப் படமும் சரியாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இயக்குநர் அமீர் நஷ்டமடைந்து கடனில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

பருத்திவீரன்: இப்படிப்பட்ட சூழலில் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர். அந்தப் படம்தான் கார்த்திக்கு முதல் படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பருத்திவீரன் திரைப்படம் எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் கிராமத்து கதைகளுக்கான ட்ரெண்டை மீண்டும் செட் செய்தது அந்தப் படம்தான்.

பஞ்சாயத்து: ஆனால் அதே படம் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையே பிரச்னையையும் உருவாக்கியது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமீரிடம் யாரும் போய் பருத்திவீரன் படம் செய்துகொடுங்கள் என்று கேட்கவில்லை. 58 லட்சம் ரூபாய் கடனுக்காகத்தான் அவர் அந்தப் படத்தை எங்களுக்கு செய்துகொடுத்தார் என ஞானவேல் ராஜா கூற; அதற்கு அமீர் பதிலடி தந்தார். மேலும் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு படம் ஆரம்பித்து பாதியிலேயே ஓடி போனவர் ஞானவேல் ராஜா என்று குறிப்பிட்டிருந்தார்.

வலுக்கும் ஆதரவு: அமீரின் அறிக்கையை அடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கின்றனர். அதிலும் சசிகுமாரும், சமுத்திரகனியும் பருத்திவீரனை சுற்றி நடந்த பண பஞ்சாயத்து என்ன என்பதையும் தங்களது பேச்சில் ஆணித்தரமாக கூறியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அமீருக்கு ஆதரவு பெருகிவருகிறது.

சூர்யாவுடன் பிரச்னை: இதற்கிடையே மௌனம் பேசியதே படத்திலிருந்தே சூர்யாவுக்கும் அமீருக்கு முட்டிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் என்ன பிரச்னை என்பது குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அமீர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், 'மௌனம் பேசியதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

எனது முதல் படம் என்பதால் பத்திரிகையாளர்களை பார்த்ததும் எனக்கு வியர்த்து போய்விட்டது. வந்திருந்தவர்கள் என்னை பார்த்து எதற்காக இப்படி பதற்றமடைகிறீர்கள் என கேட்டார்கள். அதற்கு நான் இல்லை உங்களை பார்த்ததும் எனக்கு வந்துவிட்டது என்றேன். அதனையடுத்து அவர்கள் என்னிடம், நீங்கள் ஹீரோவுக்காக கதை எழுதினீர்களா இல்லை கதையை எழுதிவிட்டு இவர்தான் ஹீரோ ஃபிக்ஸ் செய்தீர்களா என கேட்டார்கள்.

நான் உடனே எதார்த்தமாக இல்லை ஹீரோவுக்காக நான் கதை எழுதவில்லை. கதையை எழுதிவிட்டேன். அந்தக் கதை என்ன சொன்னதோ அதைத்தான் கேட்டே என்கிற தொனியில் சொன்னேன். நான் அப்படி சொன்னது எனது அருகில் இருந்த சூர்யாவை காயப்படுத்திவிட்டது. அவர் அப்போது கோபித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X