டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. நானே சந்திக்கிறேன்.. போதைப்பொருள் வழக்கில் ஆஜரான அமீர் வேண்டுகோள்!
சென்னை :சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, டெல்லியில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், திரைப்பட இயக்குனர் அமீர் ஆஜரானார். அவரிடம் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என என்சிபி அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்து சென்னை திரும்பி உள்ள அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், டிரை ப்ரூட்ஸ் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து போதைப் பொருள் தயாரிக்கும் முக்கிய வேதிப்பொருள் கடத்தப்படுவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

திடீர் கைது: இவர் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயல் அணி துணை அமைப்பாளராகவும், சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர், போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சிக்கியதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, தலைமறைவான மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.
பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் கைது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், கடந்த மூன்று ஆண்டுகளில் 3,500 கிலோவுக்கு மேற்பட்ட சூடோபெட்ரின் போதைப்பொருளை பல நாடுகளுக்கு கடத்தியிருக்கிறார். இதன் மூலம் கிடைத்த பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் உருவான மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் எடுக்கப்பட்டது என்றார்.
பல மணிநேரம் விசாரணை: இதையடுத்து ஜாபர் சேட்டிடம் நடத்திய விசாரணையில் திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, டெல்லியின் ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நண்பகல் சுமார் 12 மணிக்கு பிறகு அமீரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அவருடன் மதிய உணவு சாப்பிட்டபடியே அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
அமீர் வைத்த வேண்டுகோள்: இதையடுத்து விசாரணை முடிந்து சென்னை திரும்பிய அமீர் வேண்டுகோள் ஒன்றை விடுத்து உள்ளார். அதில், அனைத்து ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டு இருக்கிறேன். இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications











