Director Ameer: தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை.. இயக்குநர் அமீர் விளக்கம்!

சென்னை: கடந்த சில தினங்களாக தயாரிப்பாளர் ஜாபர் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இவை இந்திய அளவில் அதிகமான அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளன. இவர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகிவரும் இறைவன் மிகப்பெரியவன் படத்தை தயாரித்து வருபவர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்குகள் நடந்துவரும் நிலையில் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள விளக்கம் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளது. சட்ட விரோத செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த 22ம் தேதி தான் இயக்கிவரும் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் சூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் ஆனால் இதுகுறித்து தான் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். உண்மை எதுவென தனக்கு இதுவரை எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ள அமீர், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும் மற்றும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Director Ameer released statement about Iraivan miga periyavan producer arrest

இயக்குநர் அமீர்: பருத்தி வீரன், ராம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அமீர். சில காலங்கள் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். யோகி, வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக வெற்றிமாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திலும் முக்கியமான கேரக்டரில் அமீர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் இறைவன் மிகப்பெரியவன். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படத்திற்கு வெற்றிமாறன், தங்கம் இருவரும் கதை எழுதியுள்ளனர்.

அமீர் அறிக்கை: படத்தில் சூரி, ஆர்யாவின் தம்பி சத்யா உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 22ம் தேதி நிறுத்தப்பட்டதாக அமீர் தற்போது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். ஊடக நண்பர்களுக்கு வணக்கம் என்று தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கடந்த இரு தினங்களாக இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் தகவல்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Director Ameer released statement about Iraivan miga periyavan producer arrest

அமீர் விளக்கம்: கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறைவன் மிகப் பெரியவன் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் காரணத்தை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். உண்மை எதுவென தற்போதுவரை தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செய்திகளில் வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட மற்றும் தண்டிக்கப்பட வேண்டியதுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு தான் எப்போதுமே எதிரானவன் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை: அந்த வகையில் சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். முழுவிவரங்கள் தெரிந்த பிறகு விரைவில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரை சந்திப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறியுள்ள அமீர், இறைவன் மிகப் பெரியவன் என்று இந்த அறிக்கையை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது நடந்துவரும் சூழலில் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்று அமீர் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X