எஸ்பி ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. அமீர் வேண்டுகோள்!

சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதன் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயற்கை படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்பி ஜனநாதன். இந்தப் படம் தேசிய விருது பெற்றது.

தொடர்ந்து, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

எடிட்டிங் வேலைகள்

எடிட்டிங் வேலைகள்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.

சுயநினைவின்றி..

சுயநினைவின்றி..

இந்நிலையில் நேற்று பகல் திடீரென இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் மயங்கிய நிலையில் சுயநினைவு இன்றி கிடந்த அவரை உதவியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரவும் வதந்தி

பரவும் வதந்தி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமாகிவிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.

அமீர் அறிக்கை

அமீர் அறிக்கை

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள இயக்குநர் அமீர், அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உதவியாளர் வேண்டுகோள்

உதவியாளர் வேண்டுகோள்

எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உதவியாளரான பாலாஜியும், அவரது உடல்நிலை குறித்து பரவும் தகவலை மறுத்துள்ளார்.

வருத்தமளிக்கிறது

வருத்தமளிக்கிறது

இத்தகைய தவறான தகவல் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அவர், மருத்துவர்கள் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் ஆடியோ நோட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X