இயக்குனர் அமீரின் நன்றியுடன்...தனது புது முயற்சிகளை பகிர்ந்து கொண்ட தருணம்
சென்னை :பெரு மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய திரைத்துறை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,என் மீது அன்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன உங்கள் அத்தனை உள்ளங்களுக்கும் இயக்குனர் அமீரின் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்.
இந்த மகிழ்வான தருணத்தில் எனது திரைப்பயணத்தின் அடுத்த முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.
எனது, "அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன்" நிறுவனமும் - "JSM பிக்சர்ஸ்" நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்ற புதிய திரைப்படத்தின் "PHOTO SHOOT", நேற்று (05.12.2021) தொடங்கியது.

படப்பிடிப்பு நடைபெற
யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி -சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். "மெளனம் பேசியதே", "ராம்", "பருத்திவீரன்" ஆகிய படங்களைத் தொடர்ந்து எங்களுடைய இப்படத்தின் ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார்.

நானும், யுவன் ஷங்கர் ராஜாவும்
கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, மக்கள் தொடர்பு நிகில் ஆகியோரின் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை, "அதர்மம்", "பகைவன்" ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ்கிருஷ்ணன் இயக்குகிறார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நானும், யுவன் ஷங்கர் ராஜாவும், ராம்ஜியும், சினேகனும் இணைந்து இத்திரைப்படத்திற்காக பணியாற்ற உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அமீர் தெரிவித்து உள்ளார்

மிகப்பெரிய எதிர்பார்ப்பு
பொதுவாகவே அமீர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படங்களாக பார்க்கப்படுகிறது. மிகவும் தைரியமாக துணிச்சலான விஷயங்களை திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய ஆளுமை அமீர் என்ற இயக்குனருக்கு உண்டு.அமீர் மற்றும் யுவன் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரிய வெற்றிகளை மிகவும் எளிதில் அசால்டாக செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கூட்டணி அமைந்து இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அமைந்திருக்கிறது.

நம்பிக்கை வைத்து
கவிஞர் சினேகன் திருமணத்திற்குப் பிறகு எழுதும் பல பாடல்கள் வித்தியாசமான வார்த்தைகளை கொண்டு ஒரு புதிய புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார். இந்த படத்திலும் கவிஞர் சினேகன் பாடல் வரிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ஒட்டுமொத்த படக்குழுவும் மிகவும் நம்பிக்கை வைத்து இருக்கிறது . பொறுத்திருந்து பார்ப்போம் இந்த படத்தின் எல்லா வித முயற்சியும் மக்களை மிகவும் மகிழ்ச்சிகரமாக மாற்றியமைக்கும் தருணம் விரைவில் நடைபெறும் என்று நம்புவோம் .


Click it and Unblock the Notifications











