4 am Coffee 🙴 Kitchen: புது பிசினஸை ஆரம்பித்த அமீர்.. வெற்றிமாறன், சூரி திறந்து வைக்கிறாங்க!

சென்னை: சினிமா பிரபலங்கள் பலர் சைடு பிசினஸில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். சிலர் சினிமாவையே சைடு பிசினஸாக வைத்துக் கொண்டு மெயினாக வேறு ஒரு பிசினஸை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் அமீர் தற்போது 4 am Coffee 🙴 Kitchen நிறுவனத்தை நாளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அந்த நிறுவனத்தை நாளை திறந்து வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

Director Ameers 4 am Coffee 🙴 Kitchen new business inaugurated by Vetrimaran and Soori Tomorrow

இயக்குநர் அமீர்: நடிகர் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமீர். அதன் பின்னர் நடிகர் கார்த்தியை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்து இவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இன்னமும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படங்களில் ஒன்றாக தலைநிமிர்ந்து நிற்கிறது.

பல படங்களை இயக்கி வந்த அமீர், சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடித்து தம்மாத்துண்டு ஆங்கர் தான் அவ்ளோ பெரிய கப்பலே நிறுத்துது என வசனம் பேசி ஆக்‌ஷனில் மிரட்டி இருந்தார்.

Director Ameers 4 am Coffee 🙴 Kitchen new business inaugurated by Vetrimaran and Soori Tomorrow

புது பிசினஸ்: இந்நிலையில், புது பிசினஸை தொடங்கி உள்ள இயக்குநர் அமீர் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "மரியாதைக்குரிய பத்திரிகை தொலைக்காட்சி வலைத்தள வலையொலி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

நண்பர்களுடன் குடும்ப உறவுகளுடன் காதல் இணையுடன் கலந்துரையாடுவது எப்போதும் இனிமையானதே..

அந்த வகையில் சென்னை பெருநகரில் மற்றுமோர் மையமாக கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி டோல்கேட் மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே என்னுடைய 4 ஏ எம் காபி மற்றும் கிட்சன் எனும் நிறுவனத்தை நாளை ஜூன் 2 மாலை 7 மணி அளவில் நட்பிற்கினிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களும் அன்பிற்கினிய நடிகர் சூரி அவர்களும் திறந்து வைக்கின்றனர்.

இந்நிகழ்வில் அனைத்து ஊடக நண்பர்களும் பங்கேற்று தங்களது வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என அழைப்பு விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X