twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி மண் சார்ந்த படங்களைத்தான் எடுப்பேன்.. ஆதிபகவன் மாதிரி எடுக்கமாட்டேன்! - அமீர்

    By Shankar
    |

    பிரசாத் லேப் தியேட்டர் இன்று ஒரு ஜல்லிக்கட்டு ஏரியா மாதிரிதான் காட்சியளித்தது. வாடி வாசல் செட், காளைகளை அடக்கும் ப்ளக்ஸ்கள் என ஜல்லிக்கட்டு மயம். எல்லாம் அமீரின் சந்தனத் தேவன் படத்தொடக்க விழாவுக்காகத்தான்.

    திரைப் பிரபலங்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குநர் அமீர் ஒரு படி மேலே போய் ஜல்லிக்கட்டு மற்றும் மாடு பிடி வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தைத் தொடங்கியுள்ளார்.

    Director Ameer's new decision

    இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று காலை நடந்தது. விழாவில் பேசிய அமீர், "இனி என் மண் சார்ந்த படங்களை எடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன். ஆதிபகவன் மாதிரி ஆக்ஷன் கதைகளை எடுக்க மாட்டேன். காரணம் நான் பார்த்த மண், பழகிய மனிதர்களை வைத்து எடுத்த படங்கள்தான் ராம், பருத்தி வீரன் போன்றவை. அவை பெரிய வெற்றிப் படங்கள்.

    இன்னொன்று நான் நடித்திருக்கவே கூடாது. ஆனால் பருத்தி வீரன் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் நடிக்கவே வந்தேன். முதலில் நான் நடிக்கவிருந்த கதையே வேறு. ஆனால் பின்னர் ஒரு கொரியப் பட டிவிடியைக் கொடுத்து, அந்தக் கதையை ரீமேக் பண்ணலாம் என்றார்கள். நமக்கு இது செட் ஆகாது என்று கூறினேன். ஆனால் நடிக்க வைத்தனர். அந்தப் படம்தான் யோகி.

    Director Ameer's new decision

    ஆக்ஷன் படங்களை நம்மால் எடுக்க முடியாதா என்ற வீராப்பில் எடுத்த படம் ஆதிபகவன். சரியாகப் போகவில்லை.

    எனவேதான் இனி இதுபோன்ற முயற்சிகளில் இறங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.

    English summary
    In Santhana Thevan movie launch, Director Ameer says that here after he wouldn't try action movies like Aadhi Bhagavan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X