Ameer - நந்தா படத்தால் பயங்கர அவமானம்.. பாலாவிடமிருந்து பிரிய இதுதான் காரணம்.. அமீர் ஓபன் டாக்

சென்னை: Ameer on Bala (பாலா பற்றி அமீர்) நந்தா படத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் பாலாவிடமிருந்து பிரிந்ததாக அமீர் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். மௌனம் பேசியதே படத்தை முதன்முறையாக இயக்கிய அவர் அந்தப் படத்தின் மூலமே நல்ல இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார். அதனையடுத்து ராம் படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி தயாரிக்கவும் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகவில்லை.

Director Ameer Shares about his Friendship with Bala

பருத்திவீரன்: சூழல் இப்படி இருக்க மூன்றாவது படமாக பருத்திவீரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே பெருமையை தேடிக்கொடுத்தது. 2007ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் இன்றுவரை பலராலும் கொண்டாடப்பட்டு கிளாசிக் படமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அமீரின் மேக்கிங் அதில் தரமாக இருந்தது.

நடிகர் அமீர்: அதனையடுத்து அவர் இயக்கிய ஆதிபகவான் உள்ளிட்ட படங்களும் சரியாக போகவில்லை. பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்னையும் தலை தூக்கியது. இதனால் இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடசென்னை, உயிர் தமிழுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது மாயவலை படத்தில் நடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார்.

பாலாவின் நண்பர்: இதற்கிடையே அமீர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். நெருங்கிய நண்பர்களான இரண்டு பேரும்தான் சென்னைக்கு ஒன்றாக வந்தனர். இடையில் அமீர் சொந்த ஊருக்கே சென்றுவிட பாலா உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறிவிட்டார். பிறகு சேது, நந்தா படத்தை அவர் இயக்கியபோது அமீர் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

பிரிவு: ஆனால் திடீரென இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் பாலாவிடமிருந்து பிரிந்ததற்கான காரணத்தை அமீர் சொல்லும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “பாலாவும் நானும் ஒன்றாகத்தான் சென்னை வந்தோம். பிறகு நான் ஊருக்கு சென்றுவிட்டேன். அவரும் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குநராக மாறிவிட்டார்.

அந்தப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். பிறகு நந்தா படத்தை ஆரம்பித்தார். அதில் 70 சதவீதம் படம்வரை வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் எங்களுக்குள் சில முரண்கள் எழுந்துவிட்டன. அதாவது நந்தா படத்தின்போது பாலா வெற்றி பெற்ற இயக்குநராகிவிட்டார். அவரை பார்க்க பலர் வருவார்கள். அவர்கள் முன் பாலாவை எப்படி அழைப்பது; அவரை எப்படி அணுகுவது என்பது எனக்கு புரியாமல் இருந்தது. அவருக்கு வேண்டுமானால் மரியாதை கொடுக்கலாம். அவர் கை காண்பிப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இங்கு இருப்பது சரி இருக்காது என்பதை உணர்ந்து வெளியேறிவிட்டேன். அந்தப் படத்தில் நான் இணை இயக்குநராக வேலை பார்த்தேன். எனவே படம் வெளியானதும் இணை இயக்குநர் என்ற இடத்தில் எனது பெயர் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் இல்லை. சரி உதவி இயக்குநர் என்ற இடத்திலாவது இருக்கும் என்று பார்த்தேன். அதிலும் இல்லை. அது எனக்கு பெரிய அவமானமாக மாறிவிட்டது. அப்போதுதான் இயக்குநர் ஆக வேண்டும் என்ற வெறி எனக்கு பிறந்தது. பாலாவும் நானும் விஜயகாந்த் - ராவுத்தார் போல் இருக்கலாம் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X