பவுன்சர் விவகாரம்.. விஜய்க்கு ஆதரவாக அமீர்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாலிடிக்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் நடத்தி வரும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடானது, கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசியது ஒரு புறம் அரசியல் தளத்தில் கண்டனங்களை பெற்று வந்தாலும், மாநாட்டு மேடையில் ராம் - வாக் செல்லும்போது, அவரது ரசிகர்கள் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். அப்போது விஜய்க்கு பாதுகாவலர்களாக வந்த பவுன்சர்கள், ரசிகர்களை அலேக்காக தூக்கி கீழே வீசினர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இப்படி இருக்கும்போது, இந்த சம்பவம் தொடர்பாக, தன்னைத்தான் பவுன்சர்கள் தூக்கி கீழே எறிந்தார்கள் என்று கூறி, பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் குன்னம் காவல்நிலையத்தில், புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் விஜய் மீதும், தன்னைத் தூக்கி கீழே வீசிய பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

விஜய் மீது வழக்கு: இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த பவுன்சர்கள் மீது, ' 346/25 US 189(2), 296(b), 115(2) பி.என்.எஸ் (BNS) "பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு மதுரை மாவட்டத்தில் நடந்ததால், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த வழக்கு பெரம்பலூர் குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Director Ameer Sultan Condemns TN Police To Register TVK Vijay was First Enemy On Bouncer Issue
Photo Credit:
அமீர் கருத்து: இந்த வழக்கில் முதல் எதிரியாக நடிகர் விஜய்யின் பெயர் எழுதப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் விஜய் ரசிகர்கள் தொடங்கி அவரது தொண்டர்கள் என இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கும்போது, இயக்குநரும் நடிகருமான அமீர், இது தொடர்பாக தனது கருத்தை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். அதாவது, " தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட ரசிகர் கொடுத்த புகாரில் முதல் எதிரியாக விஜய்யைச் சேர்த்ததில் காவல்துறையின் கடமை கேள்விக்குறியாகிறது. களத்தில் எவர் எதிர்த்தாலும் ஆரோக்கியமான அரசியலே அவசியம். இது போன்ற மலிவான அரசியல் தேவையற்றது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தொடர்பான ஸ்கீரின் ஷாட்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Director Ameer Sultan Condemns TN Police To Register TVK Vijay was First Enemy On Bouncer Issue
Photo Credit:

எச்சரித்த விஜய்: மாநாட்டில், விஜய்யை நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக வந்த போது, பவுன்சர்கள் ரசிகர்களை தடுக்கவும், அவர்களை ராம் வாக் மேடையில் இருந்து கீழே இறக்கி விடவும் முயற்சி செய்தனர். அதில் ஒரு பவுன்சர் ரசிகரைத் தூக்கி கீழே எறியும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது. ரசிகரை தூக்கி கீழே வீசியதும், சுதாரித்துக் கொண்ட விஜய், உடனே பவுன்சர்களை தனக்குப் பின்னால் வரும்படி கூறினார். இந்த சம்பவமும் ராம் வாக் மேடையிலேயே நடந்தது. தனது ரசிகர் மீது பவுன்சர்கள் ஒடுக்குமுறையை கையாள்வதை விரும்பாத விஜய், உடனே அவர்களுக்கு அறிவுரையும் கூறினார். இப்படி இருக்கையில் ரசிகர் கொடுத்த வழக்கில் விஜய்யை முதல் எதிரியாக காவல்துறை பதிவு செய்திருப்பது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X