Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜெய்பீம் படக்குழுவினருடன் எப்போதும் நான்.. நடிகர் சூர்யாவுக்கு முழு ஆதரவை அளித்த அமீர்!
சென்னை: ஜெய்பீம் திரைப்படக் குழுவினருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஒரு பக்கம் எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வந்து கொண்டிருக்கும் நிலையில், திரைத்துறையினர் தங்களின் ஆதரவை அளிக்க தொடங்கி உள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் கருணாஸ், சேரன், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு அளித்த நிலையில், தற்போது இயக்குநரும் நடிகருமான அமீர் தனது முழு ஆதரவை அளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் பரிசு மற்றும் நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என பாமகவினர் கூறியதற்கு சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் த்ருஷ்யம் 2 படம்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு

சூர்யாவுடன் துணை நிற்போம்
வன்னியர்களை ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா இழிவுப்படுத்தி விட்டார் என பாமகவினர் அரசியல் செய்து வருவதாகவும் நடிகர் சூர்யாவை அடித்தால் பரிசு என சொல்வதை எல்லாம் கேட்டு கொந்தளித்துள்ள ரசிகர்கள் எப்போதும் சூர்யாவுடன் துணை நிற்போம் என #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை கடந்த இரு நாட்களாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பெருகும் ஆதரவு
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டிய நிலையில், அந்த படத்தை பார்த்த திருமாவளவன், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தை பாராட்டி இருந்தனர். சமூக அக்கறையுடன் சூர்யா எடுத்த இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது என பல தரப்பினரும் பாராட்டி இருந்தனர்.

பாமகவினர் எதிர்ப்பு
ஆனால், வன்னியர் இனத்தை வேண்டுமென்றே நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் இயக்குநர் தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என எதிர்ப்பு அரசியலை ஆரம்பித்துள்ளது மிகப்பெரிய பிரச்சனையாக கிளம்பி உள்ளது.

வெற்றிமாறன் ஆதரவு
சூர்யாவின் வாடிவாசல் படத்தை அடுத்ததாக இயக்க உள்ள இயக்குநர் வெற்றிமாறன் தனது முழு ஆதரவை நடிகர் சூர்யாவுக்கு அளித்துள்ளார். சமூகத்தில் நடைபெறும் அவலங்களை கேள்வியாக எழுப்பும் கலை படைப்பை எதிர்ப்பது தவறான செயலாகும் #WeStandWithSuriya என்ற ஹாஷ்டேக்கை போட்டு சூர்யாவுக்கும் ஜெய்பீமுக்கும் தான் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.

கருணாஸ் கண்டனம்
நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் பாமகவின் இந்த எதிர்ப்புக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் எந்த சமூகத்தையும் தவறாக காட்டவில்லை. அப்படியும் அவர்கள் சுட்டிக் காட்டிய அந்த காலண்டர் சீனை நீக்கியும் இப்படி பிரச்சனை செய்வது பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றே ஒரே போடாக போட்டுள்ளார்.

அமீர் ஆதரவு
"மதிப்பிற்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு இயக்குநர் அமீரின் அறிக்கை. சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் "ஜெய்பீம்" படக்குழுவினருடன் எப்போதும் நான்.. இப்படிக்கு - அமீர்" என தனது முழு ஆதரவை அளித்துள்ளார்.

வாடிவாசல் படத்தில்
இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இயக்குநர் அமீர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஜெய்பீம் படக்குழுவினருடன் எப்போதும் நான் துணையாக நிற்பேன் என அமீர் கூறியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் இந்த விவாகரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.