கொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்!

சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் அமீர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருதை வென்றவர்.

இப்பொழுது நாற்காலி என்ற படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் இயக்குனர் அமீர் குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி போட்ட கொண்டதுடன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

குழப்பம் கலந்த அச்சம்

குழப்பம் கலந்த அச்சம்

கொரோனா இரண்டாம் அலை முதல் அலையை விட அதிதீவிரமாக பரவி பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் திரைப் பிரபலங்கள் உட்பட பலர் நாள்தோறும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் குழப்பம் கலந்த அச்சம் இருந்து வருகிறது.

குடும்பத்துடன் தடுப்பூசி

குடும்பத்துடன் தடுப்பூசி

இந்த நிலையில் இயக்குனர் அமீர் குடும்பத்துடன் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் அது பற்றிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது. இந்த கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசின் ஏற்பாட்டின் படி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பக்தவத்சலம் முன்னிலையில் நானும் என்னுடைய குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டோம் .

முழுமையாக விடுபடுவோம்

முழுமையாக விடுபடுவோம்

இந்த பெருந்தொற்றை நம்மிடம் இருந்து விரட்ட தடுப்பூசி மட்டுமே மிகச் சிறந்த வழியாக இருக்கும். எனவே நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி பற்றிய தவறான மற்றும் எதிர்மறையான எண்ணங்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபடுவோம்.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை

மிக விரைவிலேயே நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பழையபடி வளமான ஆரோக்கியமான நோய்தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி பற்றிய முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அமீர் இப்பொழுது வி. இசட் துரை இயக்கத்தில் நாற்காலி திரைப்படத்தில் பார்க்க அரசியல்வாதியாக லீட் ரோலில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X