கோட் கூட வாழை வெளியாகி இருந்தா? என்ன ஆகி இருக்கும்.. எதற்கு தேவையில்லாத போட்டி.. அமீர் ஆதங்கம்!
சென்னை: காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி, விடுதலை படத்தில் ஹீரோவாக மாறினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். அந்த படமும் வசூலை அள்ளியது. சூரி ஹீரோவாக நடித்த மூன்றாவது படமான கொட்டுக்காளி வெளியான நிலை, இப்படம் குறித்து இயக்குனர் அமீர் கூறி இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கெவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது. அதில், அப்படக் குழுவினரோடு திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் அமீரும் அந்த நிகழ்ச்சியில் நிலையில் கொண்டார். அப்போது மேடையில் பேசிய அமீர், ஒரு படம் என்பது பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், பல வேதனைகளை அனுபவித்தோம் என்று சொல்வதால் மட்டும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை கடத்தி விடாது. அந்த திரைப்படம் அதை கடத்தியதா என்பதுதான் மிகவும் முக்கியம்.

இயக்குநர் அமீர்: வாழை வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான், இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் 'கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன படம் கிடையாது. அதை தியேட்டரில் வெளியிடாமல் ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் அப்படத்தை விற்றிருக்க வேண்டும் என்று அமீர் பேசினார்.
இயக்குநர்களின் பார்வையில் சரி: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், கொட்டுக்காளி படத்தை இயக்குநர்கள் புகழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் தனியாக புரிதல் இருக்கா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமீர், அண்மையில் வெளியான இரண்டு திரைப்படங்களையும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தது இயக்குநர்கள் தான். இதே இயக்குநர்கள் தான் மற்றொரு பெரிய படத்திற்கும் ப்ரோமோஷன் செய்கிறார்கள் அவர்களின் பார்வையில் இந்த படம் சரியானதாக இருக்கலாம்.
பணம் கொடுத்து பார்க்கிறார்கள்: ஆனால், பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களின் பார்வையில் ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. பல வேலைகளுக்கு நடுவில், பல பிரச்சனைகளுக்கு நடுவில் தனது குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்த படம் பார்க்கிறார். ஆனால், அந்த படம் அப்படி ரசித்து பார்க்கக்கூடிய அளவில் இல்லை என்று தான் நான் சொல்ல வருகிறேன். அதற்காக படம் நல்ல படம் இல்லை என்று நான் சொல்லவில்லை. கொட்டுக்காளி சர்வதேச விருதுகளை பெற தகுதியானத் திரைப்படம் தான்.
திணித்தது ஏன்: ஆனால், அந்த படத்தை வெகுஜன படமாக மாற்றுவதற்காக, அந்த காம்பினேஷனில் கொட்டுக்காளி படத்தை திணித்தது ஏன். அப்படி திணிக்கக்கூடாது அதை நான் ஒரு வன்முறையாக பார்க்கிறேன். வாழை திரைப்படமும் கோட் படமும் ஒன்றாக வெளியாகி இருந்தால் என்னவாகி இருக்கும் இது பெரிய வன்முறை இல்லையா. ஏன் தேவை இல்லாமல் ஒரு பெரிய படத்தோடு போட்டி போட வேண்டும் இதை செய்யக்கூடாது என்று தான் சொல்கிறேன் என்று அந்த பேட்டியில் இயக்குநர் அமீர் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











