விமர்சிக்கக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்?.. கங்குவா பற்றி காட்டமான அமீர்

சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தோல்வி என்பதையும் தாண்டி கடுமையான ட்ரோலுக்கும் படம் உள்ளானது. இதற்கிடையே கங்குவா படத்தை வேண்டுமென்றே தோற்கடித்துவிட்டார்கள் என்று சிலர் சப்போர்ட்டும் செய்தனர். இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான அமீர் கங்குவா படம் பற்றிய தனது கருத்துக்களை காட்டமாக முன்வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யா; சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா அந்தப் படத்தை தயாரித்திருந்தார். படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டபோது இந்தப் படம் குறித்து சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் ஓவர் ஹைப்பை ஏற்றினார்கள். அந்த ஹைப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தை பார்த்த அவர்கள் கழுவி கழுவி ஊற்றிவிட்டார்கள்.

suriya kanguva ameer


பிரபலங்கள் சப்போர்ட்: அதேசமயம் கங்குவா படத்தை வேண்டுமென்றே தோற்கடித்துவிட்டார்கள் என்று சில பிரபலங்கள் கூறினர். முக்கியமாக நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.

நெகட்டிவ் விமர்சனங்கள்: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.

வேறு எதையும் செய்யவில்லை: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த போஸ்ட்டை அடுத்து பலரும் ஜோதிகாவையும் விமர்சித்தார்கள்.

அமீர் காட்டம்: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் கங்குவா படம் பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் இதுகுறித்து தெரிவிக்கையில், “சூர்யா நடித்த கங்குவா படத்தை ஏதோ ஒரு அணியினர் வேண்டுமென்றே தாக்கித்தான் தோல்வியடைந்ததுபோல் பேசினார்கள். அப்படி பார்த்தால் பக்கத்து மாநிலங்களில் ஏன் படம் ஓடவில்லை. ரசிகர்கள் விமர்சிக்கவேக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்?.. ஒரு படைப்பு வெளியே வந்தால் அது நன்றாக இல்லாதபட்சத்தில் கண்டிப்பாக திட்டத்தான் செய்வார்கள்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X