காலத்தின் கட்டாயம்.. விஜய்க்கு ஆதரவு கொடுங்க.. நிலைமையை புரிந்து கொண்ட அமீர் சொன்ன கருத்து

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆனால் கூட நாம் கொஞ்சம் நிதானமாக கவனிக்கலாம், ஆனால் இங்கு மணிக்கு மணி பரபரப்பாக திருப்புமுனைகளாக, ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக சென்று கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் மே 7 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இந்நிலையில் விஜய் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்-ஆப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து, தமிழ்நாடு அரசியல் சூழல் மொத்தமாக மாறி உள்ளது. இப்படி இருக்கையில் விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்று உறுதி ஆகிவிட்டது. ஆனால் அவரிடத்தில் பெரும்பான்மைக்கான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. தவெக 108 இடங்களில் வென்றிருந்தாலும், 107 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர்.

இப்படி இருக்கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்து, கூட்டணிக்கு சென்றுவிட்டது. இப்படி இருக்கையில், காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இந்த மூன்று கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு அளித்தால், விஜய்க்கு தேவையான 118 என்ற எண்ணிக்கை உறுதி ஆகிவிடும்.

Director Ameer Urges VCK and Left Parties to Support Vijay Says TVK Government Is Need of the Hour

விசிக: ஆனால் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார், அதாவது விஜய் எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார், மகிழ்ச்சி. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை மையமாகக் கொண்டு தான் நாங்களும் முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அமீர்: இந்நிலையில் இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்-ஆப் பக்கத்தில், " விசிகவும் கம்யூனிஸ்ட்களும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல, தவெக தலைமையில் ஆட்சி அமைவது என்பது காலத்தின் கட்டாயம் என்று பதிவிட்டுள்ளார். விஜய் அரசியல் நடவடிக்கைகள் மீது அமீர் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X