ஜன நாயகனா.. ஜனநாயகமா? நீட் தேர்வு வினாத்தாள் கசிவுப் போராட்டத்தில் வெடித்த அமீர்!

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகத் தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில், இயக்குநர் அமீர் பேசிய பேசியது இப்போது சோஷியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ளன

அறிவார்ந்த கூட்டம் இதுதான்: இயக்குநர் வெற்றிமாறன், நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் அமீர், இன்றைய நாள் தமிழகத்திற்கே ஒரு முக்கியமான நாள். ஒரு பக்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு சிறு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், இன்னொரு பக்கம் 'ஜன நாயகன்' திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்துக்கான கூட்டம் இதைவிடப் பெரியதாக இருக்கலாம், ஆனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்துள்ள இந்தச் சிறு கூட்டம், அவர்களை விட மிகவும் அறிவார்ந்த கூட்டம் என்பதைத் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

Ameer NEET Protest
Photo Credit:

நாலேஜ் இல்லை : எனக்கு நீட் பற்றி எந்த அறிவும் இல்லை, ஆனால் மாணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் என நடிகை ரேவதி கூறினார். உண்மையிலேயே இந்த நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் என்ன பெரிய நாலேஜ் இருக்கிறதா? மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை ஒன்று மட்டுமே நம்மை இங்கு ஒன்று சேர்த்திருக்கிறது. நீட் வருவதற்கு முன்பே நானும் வெற்றிமாறனும் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில், எங்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்து முடித்துவிட்டார்கள், இனி வரப்போவது உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் என்றோம். ஆனால் அதை யாரும் அப்போது காதுகொடுத்துக் கேட்கவில்லை.

சொல்லவே மாட்டாங்க: அரசியல்வாதிகளைத் தோலுரித்த அமீர், அனிதாவின் மரண ஓலம் இன்னமும் ஓயவில்லை. நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களது ஆட்சிக்காலமே முடிந்தாலும் அந்த ரகசியத்தைச் சொல்லவே மாட்டார்கள். அனிதா வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்ன அதிகாரத்தில் இருப்பவர்களும் நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்க மாட்டார்கள். எந்த அரசும், எந்த அரசியல் கட்சியும் இதைச் செய்யாது. டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியும், அதிகாரத்திற்கு வரத் துடிக்கும் அத்தனை கட்சிகளும் ஒன்று திரண்டால் மட்டுமே நீட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றார்.

Read more about: ameer அமீர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X