நீங்கள் நடிகரே இல்லை.. மந்திரவாதி.. கர்ணன் படத்தை பார்த்து தனுஷை பாராட்டி தள்ளிய பாலிவுட் இயக்குநர்!

சென்னை: கர்ணன் படத்தை பார்த்து பிரபல பாலிவுட் இயக்குநர் தனுஷை பாராட்டி தள்ளியுள்ளார்.

Recommended Video

DHANUSH ACTING SHOOTING SPOTலையே அழுதுட்டோம் | Karnan Team Chat | Filmibeat Tamil

தமிழ் சினிமாவின் தரமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.

ஷமிதாப் படம்

ஷமிதாப் படம்

ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார் தனுஷ். இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார்.

அட்ராங்கி ரே

அட்ராங்கி ரே

தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்திப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனாவை இயக்கியிருந்தார். அட்ராங்கி ரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாரா அலிகான் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட்டிஸ் ரிலீஸ்

ஆகஸ்ட்டிஸ் ரிலீஸ்

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிந்துள்ளன. இதனிடையே அட்ராங்கி ரே படம் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குநர்

பாலிவுட் இயக்குநர்

தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ், படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் உள்ளார். இந்நிலையில் தனுஷின் கர்ணன் படத்தை பார்த்து வாயை பிளந்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநரான ஆனந்த் எல் ராய்.

நடிகர் என்று நினைத்தேன்..

நடிகர் என்று நினைத்தேன்..

இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அவுட்ஸ்டாண்டிங் அன்ட் பிரிலியன்ட்.. கர்ணன் படத்தின் அனுபவத்தை இப்படிதான் விவரிக்க முடியும்.. மாரி செல்வராஜ்.. என்ன ஒரு ஸ்டோரி டெல்லர்... செல்லுலாய்டில் உங்கள் எண்ணங்களை நீங்கள் வரைந்த விதம்.. தனுஷ் நீங்கள் ஒரு மந்திரவாதி.. இதை என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்.. நான் உங்களை ஒரு நடிகர் என்று நினைத்திருந்தேன்.. இவ்வாறு இயக்குநர் ஆனந்த் எல் ராய் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X