துபாயில் ப்ரொபோஸ் செய்து சென்னையில் காதலியை மணந்த விஜய் பட இயக்குநர்
சென்னை:இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது காதலி திவ்யங்காவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படம் மூலம் இயக்குநர் ஆனவர் ஆனந்த் ஷங்கர். அவர் விக்ரமை வைத்து இருமுகன், விஜய் தேவரகொண்டாவை வைத்து நோட்டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
மூன்று படங்களே இயக்கினாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னை பற்றி ரசிகர்களை பேச வைத்தார் ஆனந்த் ஷங்கர். இவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் ஷங்கர்
ஆனந்த் ஷங்கர் திவ்யங்கா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் அவர் திவ்யங்காவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனந்த், திவ்யங்காவின் திருமணம் சென்னையில் உள்ள சோலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சத்யராஜ்
ஆனந்த் ஷங்கர், திவ்யங்கா திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ், சீயான் விக்ரம், சத்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாழ்த்து
ஆனந்த் ஷங்கர், திவ்யங்கா தம்பதி நீடூழி வாழ வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா, விக்ரம், விக்ரம் பிரபு உள்ளிட்டோரின் ரசிகர்கள் மனதார வாழ்த்தியுள்ளனர்.
நவம்பர்
கடந்த நவம்பர் மாதம் துபாயில் வைத்து திவ்யங்காவிடம் ஆனந்த் ஷங்கர் காதலை சொல்ல அவர் ஏற்றுக் கொண்டார். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ட்வீட் செய்யாத ஆனந்த் முதல் முறையாக காதலி குறித்து ட்வீட் செய்தார். மேலும் காதலிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று திவ்யங்காவிடம் கேட்ட விதம் பல ரசிகைகளுக்கு பிடித்திருந்தது. இயக்குநர் ஆச்சே அதனால் தான் ஆனந்த் ஷங்கர் பயங்கர ரொமான்டிக்காக ப்ரொபோஸ் செய்துள்ளார் என்று அப்போது கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











