Actor Dhanush: சூப்பர் டேலண்ட் அபர்ணா முரளி.. ராயன் படத்தின் அடுத்த போஸ்டர் ரெடி!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராயன். ப பாண்டி படத்திற்கு பிறகு நடிப்பு, பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த டேலண்ட்களை வெளிப்படுத்திவந்த நடிகர் தனுஷ், இந்தப் படத்தின்மூலம் மீண்டும் இயக்குநராகியுள்ளார். கடந்த மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்தடுத்து இயக்குநராக இரு படங்களை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். இதில் அவரது இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்தப் படத்தின் டைட்டிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் வெளியிட்டிருந்தார்.
இந்த டைட்டிலுடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து படத்தின் கேரக்டர்களையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷனின் லுக்குகளை பார்க்க முடிந்தது. அடுத்தடுத்து வெளியான படத்தின் போஸ்டர்களில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் ஆகியோரின் லுக்சையும் தனுஷ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அபர்ணா முரளியின் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையும் காணப்படுகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் திரைப்பயணம் சிறப்பானது. கோலிவுட்டில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அவர் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் இணைந்து நடித்தபோது, அவரது திறமை வெளிப்படவில்லை. பத்தோடு ஒன்றாகத்தான் அவர் பார்க்கப்பட்டார். ஆனால் அடுத்தடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து நடித்து மாஸ் காட்டினார். தொடர்ந்து அடுத்தடுத்த தனுஷின் படங்கள் கவனத்தை ஈர்த்தன. கமர்ஷியலாகவும் தான் சூப்பர்தான் என்றும் நிரூபித்துள்ள தனுஷ், தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தன்னுடைய ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
அடுத்தடுத்த வெற்றி: அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை 100 கோடி கிளப்பில் இணைத்துள்ள தனுஷ் நடிப்பில் கடத்ந மாதத்தில் கேப்டன் மில்லர் படம் வெளியானது. இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் மாஸ் காட்டியது. படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களும் இணைந்திருந்தனர். படத்தை ராக்கி, சாணிக்காயிதம் என அடுத்தடுத்த மிரட்டல் படங்களை கொடுத்திருந்த அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக் கொடுத்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களை தன்னுடைய நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாக்கியுள்ளார் தனுஷ்.
ராயன் படம்: இதில் அவரது டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அடுத்தடுத்த போஸ்டர்களை தனுஷ் கடந்த சில தினங்ளாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் காணப்பட்டனர். இதையடுத்து எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டிருந்த தனுஷ், இன்றைய தினம் படத்தின் மற்றொரு லீட் கேரக்டரில் நடித்துள்ள அபர்ணா முரளி போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் டேலண்ட் அபர்ணா: சூப்பர் டேலண்ட் அபர்ணா முரளி என்று இந்தப் போஸ்டரின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதனிடையே படத்தின் முன்னணி நடிகர்களின் போஸ்டர்களை வெளியிட்டுள்ள தனுஷ், அடுத்ததாக யாருடைய போஸ்டரை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











