குட் பேட் அக்லி டீஸரைப் பார்த்து வந்த பயமா.. தாமதமாகும் இட்லி கடை ரிலீஸ்.. பின்வாங்கிய படக்குழு!

சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படம் ஏப்ரல் 20ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தாமதத்திற்கு காரணம் அந்த பெரிய நடிகரின் படம் தான் என சொல்லப்படுகிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ராயன் படத்திற்கு பிறகு தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். அந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், மேத்யு தாம்ஸ், அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர், ரம்யா ரங்கநாதன், ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், சரத்குமார் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டரில் எடுபடாமல் போனது.

dhanush idli kadai

தாமதமாகும் இட்லி கடை: இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இப்படத்தின் சூட்டிங் மதுரை, தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வரும் இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 10ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவில் படக்குழு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பயத்தில் படக்குழு: ஆனால், உண்மையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. மாபெரும் சாதனை படைத்துள்ள இந்த டீசர் வெளியான பின் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளதால், இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால், படம் வெற்றி பெறுமா என்கிற பயம் வந்துள்ளதால், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே டிராகன் படத்துடன் மோதிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் தோல்வி அடைந்ததால், தனுஷுக்கு இந்த பயம் ஏற்பட்டுள்ளது.

குபேரன்: நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரன் படத்தில் நடிக்கிறார். இறுதிக்கட்ட தயாரிப்பு நிலையில் உள்ள இப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம், தனுஷின் வாழ்க்கையில் மிகவும் விலையுயர்ந்த படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X