சில்க் ஸ்மிதா கூட இருந்தா அந்த நினைப்பே வராது.. மனம் திறந்து பேசிய ஜி.எம் குமார்!

சென்னை: கன்னி ராசி படத்தில் எழுத்தாளராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நடிகர் ஜி எம் குமார், அந்த படத்தை தொடர்ந்து, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன், போன்ற படங்களில் பணியாற்றிய இவர், 'அறுவடை நாள்' படத்தில் இயக்கி இயக்குநராக மாறினார். இந்த படத்தைத் தொடர்ந்து பிக்பாக்கெட், இரும்பு பூக்கள் உருவம், போன்ற சில படங்களை இயக்கிய இவர். தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஹைனெஸ் ஜமீன்தார் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து இதுபோன்ற கதையை தேர்வு செய்து பல படத்தில் நடித்து வருகிறார். தற்போது, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் இவர், சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

G M Kumar silk smitha interview

ஜிஎம் குமார்: அதில்,நடிகை சில்க் சுமிதாவின் மறைவிற்குப் பிறகு கவர்ச்சி நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். யாரோ ஒரு நடிகையை அழைத்து கவர்ச்சியாக ஐட்டம் பாடலை போட்டு ஆடவைக்கிறார். நடிகை சில்க் ஸ்மிதா உன்னதமான ஒரு பெண்மணி, அவருடன் பழகி விட்டால், அந்தக் காமம் எண்ணமே வராது அந்த அளவுக்கு ஒரு திறமையான பெண்மணி சில்க். எப்போதும் எங்கள் வீட்டிற்கு வந்து டிவி பார்த்துவிட்டு, இரவு உணவை சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடுவாள் அந்த பெண்ணிடம் இருக்கும் திறமையை வார்த்தையால் சொல்லவே முடியாது.

கவர்ச்சி நடிகை இல்லை :ஆந்திராவில் இருந்து சாதாரண மேக்கப் போடும் பெண்ணாக வந்த சில்க் ஸ்மிதா, ஆங்கில புத்தகத்திலிருந்து தன்னுடைய காஸ்டியூம் டிசைன்களை தேர்வு செய்வார். அவளை போன்ற ஒரு கார்டின் காஸ்டியூம் அதை பார்க்கவே முடியாது. மிகவும் ஸ்டைலான ஒரு நடிகை அதுபோன்ற ஒரு நடிகையை இதுவரை நான் பார்த்ததே இல்லை கடைசி வரையில் தனக்கான ஒருவரை தேடி அலைந்து கடைசியில் இறந்துபோனாள். சில்க் என எந்த விதமான ஒரு கதாபாத்திரத்திலும் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால், அவர் கவர்ச்சி நடிகை இல்லை.

நடிகர்களுக்கு ஹீரோ அதிகம்: தற்போது சினிமாவில் வரும் ஐட்டம் பாடல்களை பார்ப்பதற்கு ஆபாசமாக இருக்கிறது. செக்ஸி என்பது ஒரு அழகான கவிதை, அதை ஆபாசமாக்கிவிட்டார்கள். எம்ஜிஆர் நடித்த படங்களில், நடிகையுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார். இதனால். அந்த காலத்தில், கணவன் தன் மனைவியை எம்ஜிஆர் படத்திற்கு அனுப்பமாட்டார்கள். சிவாஜி படத்திற்கு அனுப்புவார்கள். எம்ஜிஆர் படத்தின் பாடலில் நடிகையுடன். அவ்வளவு இனக்கமாக நடித்து இருப்பார். அதேபோல, அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா என பல நடிகைகளுடன் பல திரைப்படங்களில் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால், இன்றைய காலத்தை ஹீரோக்களுக்கு ஈகோ இருப்பதால் ஒரு படத்திற்கு பிறகு அந்த நடிகையுடன் சேர்ந்து நடிப்பது இல்லை. தற்போதைய சினிமாவில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்று அந்த பேட்டியில் எம் ஜி குமார் பேசுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X