திருமணத்தில் நம்பிக்கை இல்லை.. 25 வருஷம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. மனம் திறந்த நடிகர்!

சென்னை: அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார், அந்த படத்தை தொடர்ந்து பிக்பாக்கெட், இரும்புபூக்கள், உருவம் போன்ற படத்தை இயக்கினார். அதன் பின் நடிகராக மாறி ஜி எம் குமார், வெயில், மாயாண்டி குடும்பத்தார் என பல படத்தில் நடித்தார். இவர், பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஐனெஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த ரோல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து தாரை தப்பட்டை படத்திலும் ஒரு நல்ல ரோலில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அடுத்த படத்தில், தனக்கான கதையை தேர்வு செய்து நடித்து வரும் ஜி எம் குமார், Rednool youtube சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், காதல் குறித்தும் திருமணம் குறித்தும் பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை காமம் மட்டும் தான். அதை கவிதையாக சொல்லவேண்டும் என்பதற்காக காதல் என்று மாற்றி இருக்கிறார்கள். ஏனென்றால் காமம் என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. காது, மூக்கு, கண் இவை எல்லாம் கெட்ட வார்த்தை இல்லை. ஆனால், ஒரு மனிதனின் முக்கியமான பிரைவேட் பார்ட் என்று சொல்லப்படும் அனைத்தையும் கெட்ட வார்த்தையாக ஆக்கிவிட்டார்கள். இதனால் காதலை நான் நம்புவதில்லை. ஆனால் காமத்தை நான் நம்புகிறேன்.

g m kumar interview

நடிகர் ஜிஎம் குமார்: திருமணம் என்பது இன்றைய சமூகத்திற்காக நாம் செய்து கொள்ளும் ஒரு விஷயம் தான். அது மனிதனுக்கான விஷயம் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து காமத்தில் ஈடுபட சொல்வதைவிட ஒரு பெரிய முட்டாள் தனமும் காமெடியும் வேறுஇல்லை. இதை தான் ஒரு ஊழலாக பார்க்கிறேன். ஊரையெல்லாம் கூட்டி ஒரு பெண்ணுக்கு திருமணத்தை செய்துவைத்துவிட்டு, அந்த பெண் அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும், அதில் இருந்து வெளியே வர முடியாது. ஆனால், லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் அப்படி இல்லை. எல்லா சுதந்திரமும் இருக்கும். ஆனால், அப்போதும் ஒருவருக்காக இருக்கிறார்கள் என்றால் அது உண்மையில் புத்திசாலித்தனமான ஒன்று தான்

25 வருடம் ரிலேஷன் ஷிப்: எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், நான் ஒரு பெண்ணுடன் 25 வருடமாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தேன். ஆனால், அது கடைசி வரை நிலைக்காமல் போய்விட்டது அதற்கு காரணம் சளிப்பு தான். எனக்கு இழுத்து போர்த்திக் கொண்டு, அழுதுக்கொண்டு இருக்கும் பெண்களை பிடிக்காது, ஸ்டைலாக தைரியமான பெண்களை நான் விரும்புவேன் என்று ஜிஎம் குமார் பல விஷயம் குறித்து மனம் திறந்து அந்த பேட்டியில் பேசினார்.

g m kumar interview

பல்லவியுடன் காதல்: பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்த ஜிஎம்குமார், அறுவடை நாள் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக மாறினார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றிப்பெறவில்லை. அதன் பின்னும் நான்கு திரைப்படத்தை இயக்கி கடனில் சிக்கிய இவருக்கு, நடிகை பல்லவி தான் உதவி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால், அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் ஜிஎம் குமார் பல பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X