காற்றில் கலந்த.. இந்தாம்மா ஏய்.. மாரிமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்!

சென்னை: எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து கடந்த ஆண்டு இதே நாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து வசதி,பள்ளிக்கூட வசதியே இல்லாத ஒருகிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மாரிமுத்து, சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு முன்னேறினார்.

ethirneechal marimuthu death anniversary

மாரிமுத்து : மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த், ராஜ்கிரண் போன்ற பிரபலங்களின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார் . அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகனம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது என அடுத்தடுத்து நடித்து வந்தார்.

கஷ்டப்பட்டு உழைத்தார்: சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு நடிக்க வந்த மாரிமுத்து, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார்.மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவரச்செய்தன எனலாம். இந்த நாடகத்தை அனைவரும் பார்க்க தொடங்கியதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவர் ஒருவர் மட்டுமே என்றும் கூறலாம். குறிப்பாக இவர் பேசிய இந்தாம்மா ஏய் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

திடீர் மரணம்: படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வந்த மாரிமுத்து கடந்த ஆண்டு இதே நாளில், எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டு இருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து,தனது காரை அவரே ஓட்டிக்கொணடு வந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிசசை அளித்து வந்த நிலையில் அவரது உயிர்பிரிந்தது.

முதலாம் ஆண்டு நினைவு தினம்: இதையடுத்து அவரது உடல் சொத்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கம்பீரமான குரலாலும், அசாத்தியமான நடிப்பாலும் ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்த மாரிமுத்து இந்த மண்ணை விட்டு சென்று இன்றோடு ஓராண்டாகிறது. இந்த நாளில் அவரது ரசிகர்கள் நினைவுகூர்ந்து அனுசரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X