ஹார்ட் அட்டாக்கே வந்துச்சு.. அப்பக்கூட கதை சொன்னாரு.. பாலச்சந்தர் குறித்து மனம் திறந்த நடிகர்!

சென்னை: இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியரான மௌலி, தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் இயக்கியும் நடித்தும் இருக்கிறார். இவர், கமல்ஹாசன், சிம்ரன் ஆகியோர் நடித்த பம்மல் கே. சம்பந்தம் திரைப்படத்தையும், மாதவன் நடித்த நளதமயந்தி திரைப்படத்தை இவர் இயக்கிய வெற்றித் திரைப்படங்களாகும். அதுமட்டுமில்லாமல் இவர் மாதவனுடன் சேர்ந்து மாறா என்ற படத்தில் வெள்ளையா என்ற படத்தில் தனது காதலிக்காக 50 ஆண்டுகள் காதலிக்கும் கதாபாத்திரத்தில நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய நல்லப்பெயரை பெற்றுத்தந்தது.

தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாது ஒரு விஷயம். முதலில் அந்த சீரியலில் நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால், இயக்குநர் என்னிடம் கேட்டுக்கொண்டதால், நடித்தேன். நாதஸ்வரம் வாசிக்கும் போது டிவியில் பார்த்து, யாரும் என்னடா இவன் இப்படி தப்பாக வாசிக்கிறான் என்று குறை சொல்லிவிடக்கூடாது என்பதற்கான, ஒரு நாதஸ்வர கலைஞரை வரைவைத்து அவரை இந்த இசைக்கு வாசிக்க வைத்து அதைப்பார்த்து நான் சீரியலில் நாதஸ்வரம் வாசித்தேன், அந்த சீரியலில் நான் நடித்தன் மூலம் பட்டிதொட்டி எங்கும் நான் பிரபலமானானேன்.

moulee k balachander interview

பல நாடகத்தில் நடித்ததால், எனக்கு இயக்குநர் பாலசந்தரின் நட்பு கிடைத்தது, நானும் காரில் பல இடத்தில் சுற்றி இருக்கிறோம். அவர் யோசிக்கும் கதை பற்றி என்னிடம் சொல்லுவார் அப்படித்தான், ஒரு முறை அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துச்சு,. அப்போது என்னை அவர் பார்க்க வேண்டும் என்று சொன்னதாக சொன்னார்கள் நான் பாலசந்தரைப் போய் பார்த்தேன் அவர், ஈசியூவில் இருந்தார். அப்போது, நான் ஒரு கதை யோசித்து வைத்து இருக்கிறேன். அதான் ஒன்லைன் சொல்லுகிறேன் நீ தான் அதை திரைக்கதையை எழுத வேண்டும் என்று சொன்னார். நான் உடனே ஏன் சார், இப்போது என்ன அவசரம் இந்த நிலைமையில் எதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். ஆனால், அவர் கேட்கவே இல்லை. அந்த நிலைமையில் அவர் சொன்ன கதைதான் அரங்கேற்றம். நான் பாலசந்தரின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன் என்று அதில் அவர் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X