Mysskin Birthday : வித்தியாச இயக்குனர் மிஷ்கின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இயக்குநர் மிஷ்கின் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் இயக்குநர் மற்றும் நடிகர் என்பதை தாண்டி, சூப்பர் டீலக்ஸ், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களுக்கு எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார்.

Director and actor Mysskin is celebrating his 52nd birthday today

இயக்குநர் மிஷ்கின்: சண்முகராஜா என இயற்பெயர் கொண்ட இவர், 1971ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர், இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களை இயக்கிய கதிரிடம் தான் உதவி இயக்குநராக சேர்ந்தார். உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

படங்களில் நடித்துள்ளார்: இதைத் தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கும். இயக்குநராக இருந்த மிஷ்கின், நடிகராக சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாடவும் தெரியும்: அஞ்சாதே, திண்டுக்கல் சாரதி, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் பாடவும், சில படங்களில் பாடல்களை எழுதியும் உள்ளார். குறிப்பாக கள்ளப்படம் எனும் திரைப்படத்தில், வெள்ளைக்கார ராணி எனும் பாடலையும், அஞ்சாதே படத்தில் கண்ணதாசன் காரக்குடி பாடலையும் பாடி தான் ஒருபாடகர் என்பதை நிரூபித்தார்.

லியோ படத்தில்: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டாம் பாகம் எடுத்து முடிக்கப்பட்டு,படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மிஷ்கின் இப்படத்தை குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காத நிலையில், தற்போது லோகேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 18ந் தேதி வெளியாக உள்ளது. மிஷ்கின் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X