RJ Balaji: ஒரு மொக்க படத்துல நடிச்சா.. அது அதோட நிக்காது.. ஆர்ஜே பாலாஜி பேட்டி!
சென்னை: ஆரம்பத்தில் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஒரு மொக்க படத்தில் நடித்தால், அது அதோட நிக்காது, பல நல்ல படத்தின் வாய்ப்பை கெடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர், பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் போன்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து இவர், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, வடகறி, இது என்ன மாயம், யட்சன் மற்றும் நானும் ரவுடி தான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த ஆர்ஜே பாலாஜி LKG படத்தின் மூலம் முழு ஹீரோவானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டராக ஹிட்டடித்தது. அதன் பின் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். அந்த படம் பலரின் பாராட்டை குவித்தது. 2018 ஆம் ஆண்டு ஹிந்தி பிளாக்பஸ்டர் படாய் ஹோவின் ரீமேக்கான வீட்ல விசேஷம் என்ற நகைச்சுவை நாடகத் திரைப்படத்தையும், ரன் பேபி ரன் படத்தையும் இயக்கினார்.
அந்த சீனில் நான் இல்ல: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆர்ஜே பாலாஜி, நான் ஒரு மொக்க படத்தில் நடிக்கிறேன் என்றால், அது அந்த படத்தோட போய்விடாது, ஒரு நல்ல படத்தில் முக்கியமான காட்சி எடுக்கும் போது, நான் மொக்க படத்தில் மாட்டிக்கொண்டு இருப்பேன். நானும் ரௌடிதான் படத்தில் பல முக்கியமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். குறிப்பாக அந்த படத்தில், நயன்தாராவை ஆனந்த் ராஜ் கடத்தி வைத்து இருப்பார். அந்த காட்சியில் நயன்தாரா ஏய்... ரெட் டீ ஷர்ட்னு சொல்லி இருப்பாங்க.. அந்த சீன் செமயா வொர்க் அவுட் ஆச்சு. அந்த காட்சியில் நான் இருந்து இருக்கனும், ஆனால், நான் இருக்க மாட்டேன்.
புரிந்து கொண்டேன்: அதே போல காசிமேட்டில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. ஆனால், நான் என் காட்சியை சரியாக பண்ணாததால், மீண்டும் எடுக்கும்படி ஆகிவிட்டது. அப்போது, ஒரு டெக்னிஷியன் என்னைப் பார்த்து, இவ்வளவு பேரு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நீ பொருப்பே இல்லாமல் இருக்க என்று கேட்டார். அது என்னை மிகவும் பாதித்தது. ஆனால், அடுத்த ஷாட்டில் ஒரே டேக்கில் முடித்துவிட்டேன். அப்போது சுற்றி இருந்தவர்கள் கை தட்டினார்கள். நான் இன்னும் சீரியசாக இருக்க வேண்டும் என்பதை அந்த படம் எனக்கு கற்றுக்கொடுத்தது.


Click it and Unblock the Notifications











