Selvaraghavan: விளங்கவே விளங்காது.. எதுக்கு இந்த வேலை.. செல்வராகவன் சொன்ன சீக்ரெட்!
சென்னை: கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் மூலமாகத்தான் தனுஷும் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என அடுத்தடுத்த படத்தில் நடித்தார்.
இவர் சோனியா அகர்வாலை காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இயக்குநராக பல திரைப்படத்தை இயக்கிய செல்வராகன், பீஸ்ட் படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடித்து வரும் செல்வராகவன், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இணையத்தில் தத்துவத்தை பேசி வருகிறார்.

விளங்கவே விளங்காது: தற்போது,செல்வராகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், நீங்க ஒரு விஷயம் பண்ண போறீங்க, ஒரு லட்சியத்தை அடைவதற்கு தயாராகிட்டு இருக்கீங்க ரொம்ப நல்ல விஷயம் தான். அந்த விஷயத்தை என் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சு சொல்லணும். ஏய் நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? நான் என்ன செய்யப் போறேன் தெரியுமா ? அனைவரிடம் சொல்லி சொல்லி கடைசியில் அந்த காரியம் விளங்காமலே போயிடும். நீங்க ஒரு விஷயத்தை சொல்லி அதைக் கேட்டு அவங்க சந்தோஷப்படுவாங்கன்னு நினைக்கிறீங்களா, இந்த உலகத்துல யாரும் எதுக்காகவும் மத்தவங்க வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுவதே இல்லை. அமைதியா இருங்க, அமைதியா வேலை செய்யுங்க, அமைதியா போங்க.. அமைதியா வாங்க.. நீங்க வேலை செய்வது யாருக்குமே தெரியக்கூடாது.
யாரிடமும் உதவி கேட்காதீர்கள்: அதுமட்டுமில்லாமல் எதுக்காகவும் யாருக்கிட்டேயும் போய் உதவி கேட்காதீர்கள். நீங்க ஒருவரிடம் சின்ன உதவிதான் கேட்டு இருப்பீங்க அந்த உதவியும் அவங்க செஞ்சிடுவாங்க, ஆனா, அத உங்க ஆயுசு முழுக்க சொல்லி சொல்லி, என்னால தான் அவன் இந்த அளவிற்கு பெரியவன் ஆனான். நான் தான் அவனுக்கு இந்த உதவியை செஞ்சேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒன்றையனா உதவியை செய்துவிட்டு, ஆயிரம் கோடிக்கு உதவி செய்ததுபோல பேசுவாங்க என்று செல்வராகவன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











