Selvaraghavan:தினமும் காலையில் மறுபிறவி எடுக்கிறோம்.. தத்துவ ஞானி செல்வராகவனின் இன்றைய தத்துவம்!

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக முத்திரை பதித்த செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன் படங்களின் மூலமாக நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், தனது அனுபவத்தை தத்துவமாக பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனது தம்பி தனுஷை கதாநாயகனாக நடிக்கவைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படத்திற்கு ஒருதரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தை தொடர்ந்து சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். காதல் கொண்டேன் படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

Director and actor Selvaraghavans latest instagram post

வெற்றிப் படங்கள்: காதல் கொண்டேன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். இவை தவிர செல்வராகவன் மற்ற ஹீரோக்களை வைத்து இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படமெல்லாம் காலத்துக்கும் அழியாத படங்களாக உள்ளன. இயக்கத்தில் கவனம் செலுத்திவந்த செல்வராகவன் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். பீஸ்ட் படத்தில் நடிகராக அறிமுகமான செல்வராகவன், சாணிக்காயிதம், ஜி மோகன் இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்தார். இவரது நடிப்பு ரசிக்கப்பட்டாலும் செல்வராகவன், இவரும் கௌதம் வாசுதேவ் மேனனை போல முழு நேர நடிகராகிவிடுவாரோ என ரசிகர்கள் பயந்தனர்.

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இணையத்தில் தத்துவத்தை பொழிந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, தினமும் காலையில் எழுந்தவுடன் மறுபிறவி எடுக்கிறோம். இது மனித இனத்திற்கு கடவுள் கொடுத்த வரம் என தனது போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தத்துவ ஞானி: அதே போல இவர் கடந்த மாதம், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை என பதிவிட்டு இருந்தார். இப்படியான அவரின் தத்துவத்திற்கு என்ற செல்வராகவனுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X