மீண்டும் ஹீரோவாகும் எஸ்.ஜே.சூர்யா.. அந்த இயக்குநரா.. வேண்டவே வேண்டாம் சாமி!

சென்னை: இயக்குநர் ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி தோல்விப்படமாக அமைந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளனது.

வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. தம்பி மனைவியை அண்ணன் அடையை துடிக்கும் கொஞ்சம் விவகாரமான கதையை துணிச்சலுடன் கையில் எடுத்து அதை அனைவரும் ரசிக்கும்படி திரையில் காட்சிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் அஜித்,சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என மூவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து குஷி படத்தில் கதாநாயகி ஆக்கினார். தமிழில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

Director and actor SJ Surya becomes the hero again

ஹீரோவாக அறிமுகம்: இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிப்பில் கால்பதிக்க எண்ணிய எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற ஒரு படத்தை இயக்கி, தானே ஹீரோவாக நடிக்கவும் செய்தார். சிம்ரன் நாயகியாக நடித்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டடித்தன. இந்த படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவிற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி என பல படங்களில் நடித்தாலும் இவை பெரிய வெற்றிகளை பெறவில்லை.

மிரட்டலான வில்லன்: இதையடுத்து, 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி எஸ்.ஜே.சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பிப் போட்டது எனலாம். அதன் பிறகு ஸ்பெடர் படத்தில் சைக்கோ வில்லனாக நடித்து பெயர் எடுத்தார். பின் சிம்பு நடித்த மாநாடு படத்தில் தலைவரே.. தலைவரே என பேசும் வசனம் மிகபெரிய அளவில் வைரலானது. தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேண்டாவே வேண்டாம் சாமி: இயக்குநர் ராஜு முருகன் கடைசியாக கார்த்திக்கை வைத்து ஜப்பான் என்ற படத்தை இயக்கினார். கார்த்திக்கின் 25வது படமான இப்படத்தில், தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் கழுவி ஊற்றினார்கள். எஸ்.ஜே.சூர்யா திரைப்பயணம் இப்போது சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அவர் வில்லனாக மிரட்டி வருகிறார். இந்த நேரத்தில் மீண்டும் ஹீரோவாக, அதுவும் இந்த இயக்குநரோடா வேண்டாவே வேண்டாம் சாமி என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X