அனிமல் வாமிட் வர வைத்த படம்.. கொந்தளித்த ராதிகா.. வாவ், சூப்பர்னு பாராட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

சென்னை: ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது இந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இப்படம் பார்த்த ராதிகா, பாடகர் ஸ்ரீநிவாஸ் படத்தை கடுமையாக விளாசி வரும் நிலையில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்கா, பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூரை வைத்து இயக்கிய திரைப்படம் தான் அனிமல். இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாகவும், அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மனன் பரத்வாஜ், விஜால் மிஸ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ராமேஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். டி-சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார்.

 Director and actress Lashmy Ramakrishan praise animal movie

இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தில் நடிகை த்ரிப்தி டிம்ரி, ரன்பீரின் இன்னொரு காதலியாக நடித்திருப்பர். அவர் ரன்பீருடன் மிக மிக நெருக்கமாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் ரன்பீர் மீதான தனது காதலை நிரூபிக்க, த்ரிப்தியை தன்னுடைய ஷூவை நாக்கைக்கொண்டு நக்க சொல்வார் ரன்பீர். பெண்களை இழிப்படுத்தும் வகையில் இருந்த அந்த காட்சி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

படு மோசமான விமர்சனம்: ஊடகத்திலும், சோஷியம் மீடியாவிலும் இந்த படம் குறித்து விவாதமே நடந்தது. இப்படி பலவிதமான சர்ச்சையான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாலும் இப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்தாலும், இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தி தவிர்த்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் இப்படத்தை பார்க்கலாம்.

வாமிட் வர வைத்தது: அனிமல் படத்தை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார் இப்படியொரு கிரிஞ்ச் படத்தை எப்படி எடுத்தார்கள் என்றும் வாந்தி தான் வருது என படத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தனது கண்டனத்தை எனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதே போல, பாடகர் ஸ்ரீநிவாஸ் படம் பார்த்து செம கடுப்பாகி, அனிமல் படம் அனிமல்களுக்காக அனிமலால் எடுக்கப்பட்ட படம். இதில், நான் நிஜ விலங்குகளை குறிப்பிடவில்லை என மிருக புத்தியுடன் படத்தை இயக்கியுள்ள சந்தீப் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாவ், சூப்பர்: இப்படி அனிமல் படத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில், படம் பார்த்த நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இன்று அனிமல் படம் பார்த்தேன், கற்பனை, நடிப்பு, கைவினை, பிரம்மாண்டம், மற்றும் வக்கிரம் என அனைத்தும் சிறப்பு. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான க்ளைமாக்ஸ் காட்சி அருமை, தீவிர வன்முறையைக் கொண்டாடுதல், திரையில் இரத்தம் சிந்துதல் மற்றும் அனைத்தும் அனுராக் காஷ்யப் பாராட்டியதை போல் இருக்கிறது. வாவ் என படத்தை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X