விஜய் பற்றி அஜித் என்ன சொன்னாரு தெரியுமா? உண்மையை உடைத்த ரமேஷ் கண்ணா!

சென்னை: அஜித் மற்றும் விஜய்யுடன் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், வசன கர்த்தாவாகவும் உள்ளார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து அஜித் கூறியதை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்து வசூலை அள்ளிய 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமில்லாமல் துணை நடிகராக ஆண்பாவம், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னை நினைத்து போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Ajith Vijay ramesh kanna

அஜித்துடன் பல படத்தில்: விக்ரமன், கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய இவர், வசனகர்த்தாவாக சூப்பர் ஸ்டார் நடித்த பல படங்களுக்கு மாஸ் வசனத்தைக் கூட எழுதி இருக்கிறார். நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பல திறமைகளை கொண்ட ரமேஷ் கண்ணா, அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தை இயக்கினார். அஜித்தை வைத்து இயக்கியது மட்டுமில்லாமல் காதல் மன்னன், அமர்க்களம், நீ வருவாய் என, ஆஞ்சனேயா, அட்டகாசம், வரலாறு, வில்லன் , வீரம் என பலத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரமேஷ் கண்ணா பேட்டி: இந்நிலையில் யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரமேஷ் கண்ணா, அஜித் குறித்து பல விஷயத்தை பேசினார். அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது, அஜித் மற்றும் ஷாலினி பேசிக் கொள்வது காதலித்தது எல்லாம் தெரியாது. இது தெரியாமல் நான் படப்பிடிப்பில், சினிமாவில் இருக்கும் பெண்ணை மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாதே என்று அட்வைஸ் செய்தேன், பிறகு பார்த்தால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றார்.

அவர் சொன்ன அந்த வார்த்தை: தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் கூட அஜித்திடம் விஜய் பற்றி அவரின் அரசியலுக்கு வந்து விட்டார். நீங்க எப்போ என்று என சும்மா கிண்டலாக கேட்டேன். அதற்கு அஜித் மூடிட்டு போ என சொல்லுவார். பொதுவாக அஜித்துக்கு அரசியலில் ஆர்வமே கிடையாது. அரசியல் பேச்சை எடுத்தாலே அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். அரசியல் பற்றி அவருடைய ஒரே ஒரு பார்வை ஜனநாயக கடமையை ஆற்றுவது மட்டும்தான் என ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X