Vijay: அடம்பிடித்த விஜய்.. எந்த விஷயத்துக்கு தெரியுமா.. சீக்ரெட் பகிர்ந்த எஸ்ஏசி!
சென்னை: நடிகர் விஜய் தன்னுடைய சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவான இவர் இளைய தளபதியாக கொண்டாடப்பட்டார். ஒரு கட்டத்தில் இவரை தளபதி என அழைத்து ரசிகர்கள் அழகு பார்த்தனர். இந்நிலையில் தற்போது அரசியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது தவெக கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
இதையொட்டிய செயல்பாடுகளில் அவர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதத்தில் அவரது கட்சியின் முதல் மாநாட்டை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்துள்ளார். அவர் எப்போதுமே தான் நினைத்ததை செய்து முடிக்க தீவிரம் காட்டுவார் என்று அவரது அம்மாவும் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே தன்னுடைய அப்பாவின் படங்களில் விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆன விஜய்க்கு துவத்தில் மிகவும் மோசமான கமெண்ட்களே கிடைத்தன. அதையெல்லாம் தன்னுடைய சாதனைகளுக்கான படிகெட்டுக்களாக மாற்றிக் காட்டினார். இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட இவர் தற்போது தளபதியாகவும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளார். இதையெல்லாம் தாண்டி அரசியல் கட்சியை அறிவித்து அதிரடி கிளப்பியுள்ளார்.
இயக்குநர் எஸ்ஏசி: கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய அப்பாவிடம் மனஸ்தாபம் காட்டிய நடிகர் விஜய் தற்போது அவருடன் இணக்கம் காட்டி வருகிறார். அவரும் தன்னுடைய பல பேட்டிகளில் விஜய் குறித்த மகிழ்ச்சிகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்யின் கல்லூரி காலத்திலிருந்து அவரிடம் இருக்கும் ஒரு ஆசை குறித்து இயக்குநரும் நடிகருமான எஸ்ஏசி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மார்க்கெட்ல எந்த கார் வந்தாலும் அதை வாங்கிவிட விஜய் அடம்பிடிப்பார் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து இதை அவர் செய்து வருவதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.
கார் மீது விஜய்யின் விருப்பம்: அதனால் சென்னை மார்க்கெட்டில் ஏதேனும் புதிய கார் வந்தாலும் விஜய்க்காக அதை தான் வாங்கிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். முன்னதாக மற்றொரு பேட்டியில் பேசிய எஸ்ஏசி, கருவிலிருந்தே நடிகர் விஜய் நடிப்பிற்காக தயாரானதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகர், விஜய்யை கருவில் வைத்திருத்நபோதே தினந்தோறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் இதனால் விஜய் தினந்தோறும் இசையை கேட்டு வளர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார், இதனால் கருவில் இருந்தபோதே விஜய் சினிமாவிற்காக தயாரானதாகவும் எஸ்ஏசி பெருமை தெரிவித்துள்ளார்.
விஜய் குறித்து எஸ்ஏசி பாராட்டு: தற்போதும் விஜய் சினிமாவில் அடுத்தடுத்த பாடல்களை பாடி வருகிறார். கோட் படத்தில் 2 பாடல்களை யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியுள்ளார். கடந்த மாதத்தில் இவரது இறுதிப்படமான தளபதி 69 பூஜையுடன் துவங்கப்பட்டு முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கும் சென்னையில் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே காம்பினேஷன் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications