Don't Miss!
- News
வந்தே பாரத் ரயிலின் ஸ்மால் வெர்ஷன்.. விரைவில் வருகிறது 'வந்தே மெட்ரோ' இதுல என்ன ஸ்பெஷல்?
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Technology
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர்.. ஏன் இப்படி!
சென்னை : பிரபல இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவரது பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இவரை சிறந்த இயக்குநராக அறிய வைத்தது.
1981ம் ஆண்டில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆனார்.
பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்.. பரபரப்பாக நடக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்
பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு கோலிவுட்டில் இவர் செயல்பட்டு வருகிறார்.

சட்டம் ஒரு இருட்டறை படம்
கடந்த 1981ம் ஆண்டில் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின்மூலம் தமிழில் இவர் இயக்குநராக அறிமுகமானார். இவரது பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கிவரும் எஸ்ஏசி கொடி, மாநாடு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மகனுடன் கருத்து வேறுபாடு
இவருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் தொடர்ந்து விஜய் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார் எஸ்ஏசி. இவரது இந்த வீடியோக்கள் மிகுந்த வைரலாகி வருகின்றன. விஜய் குறித்த பல சுவாரஸ்யங்களை இவர் இந்த வீடியோக்களில் பகிர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் கமெண்ட்
இவருடன் பல ஆண்டுகளாக நடிகர் விஜய் பேசாமலும் அவருடைய வீட்டிற்கு செல்லாமலும் நடிகர் விஜய் இருப்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வயதான காலத்தில் எஸ்ஏசியுடன் விஜய் மீண்டும் பேச வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஹரித்துவார் சுற்றுலா
இதனிடையே தற்போது எஸ்ஏசி ஹரித்துவாருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய உதவியாளர்களை சைக்கிள் ரிக்ஷாவில் அமர வைத்து எஸ்ஏசி ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

சைக்கிள் ரிக்ஷா ஓட்டிய எஸ்ஏசி
தன்னுடைய உதவியாளர்களிடம் மிகுந்த உரிமையும் அன்பும் வைத்துள்ள எஸ்ஏசி அவர்களுடன் இந்த ஹரித்துவார் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களை வைத்து சைக்கிள் ரிக்ஷா ஓட்டிய சம்பவம் அவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகின்றன.