என்ன இப்படியொரு முடிவு? பாலிவுட்டில் இருந்து விலகிய டாப்ஸி பட இயக்குனர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By

மும்பை: பாலிவுட்டில் இருந்து விலகப் போவதாக பிரபல இயக்குனர் அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் பற்றிய பிரச்னை தலைதூக்கி இருக்கிறது.

இந்தப் பிரச்னை பிறகு நடிகைகள் கங்கனா, டாப்ஸி, ஸ்வாரா பாஸ்கர், இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனர்

சமூக வலைதளங்களில் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இந்தி பட இயக்குனர் அனுபவ் சின்கா, பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். நடிகர் சுஷாந்த் மறைவு குறித்தும் நெபோடிசம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருந்த இவர், சிறந்த பாலிவுட் பட இயக்குனர்களில் ஒருவர். சமூகத்துக்குத் தேவையான சில படங்களை இயக்கியுள்ளார்.

டாப்ஸி நடித்த தப்பட்

டாப்ஸி நடித்த தப்பட்

ஷாருக் கான், கரீனா கபூர் நடித்த ரா.ஒன், ரிஷிகபூர், டாப்ஸி நடித்த முல்க், ஆயுஷ்மன் குரனா நடித்த ஆர்டிகிள் 15, டாப்ஸி நடித்து பரபரப்பாகப் பேசப்பட்ட தப்பட் உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கும் திரைப்படங்களும் சமூக பிரச்னைகளை ஆழமாக கேள்விக் கேட்கக் கூடியவை என்பதால், பாலிவுட் தாண்டியும் இவருக்கு ரசிகர் வட்டம் உண்டு. தப்பட்-டும் ஆர்டிகிள் 15 படமும் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படங்கள்.

விலகுகிறேன்

விலகுகிறேன்

இந்நிலையில் இயக்குனர் அனுபவ சின்கா, பாலிவுட்டில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டரில், 'போதும், பாலிவுட்டில் இருந்து விலகுகிறேன்' என்று கூறியுள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று அவர் தெரிவிக்கவில்லை. பிறகு ட்விட்டரில் தனது பெயரை அபினவ் சின்கா (நாட் பாலிவுட்) என்று மாற்றினார்.

சினிமாவை விட்டு அல்ல

சினிமாவை விட்டு அல்ல

இதையடுத்து ரசிகர்கள், அவர் வெளியேற கூடாது என்று பதிவிட்டனர். ஒருவர், 'நீங்கள் பாலிவுட்டில் இருந்து வெளியேறுவதை யாரும் விரும்பவில்லை. உங்களை போன்ற சிறந்த இயக்குனர்கள் எங்களுக்குத் தேவை' என்று கூறியுள்ளார். இதையடுத்து, தனது ட்விட்டரில்,
'நிச்சயமாக தொடர்ந்து படங்களை இயக்குவேன். ஆனால் என் முறையை மாற்றி இருக்கிறேன். பாலிவுட்டை விட்டு மட்டும்தான் விலகுகிறேன். சினிமாவை விட்டு அல்ல. இதுகுறித்து விரிவாக பிறகு சொல்கிறேன்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X